எல்லை அழைப்புகள் செப்டம்பர் 27-ம் தேதியுடன் முடிந்துவிட்டன என்பதை செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொரு நுகர்வோரும் மிக நன்றாக உணர முடிகிறது. இப்போது எந்த நிறுவனத்திடமிருந்தும், "உங்களுக்கு இந்தச் சேவை காத்திருக்கிறது', "உங்களுக்கு இந்தப் பாட்டு வேண்டுமா?' "உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது?' என்று பதிவுசெய்யப்பட்ட இனிய குரல் எரிச்சலூட்டுவதில்லை. அழிக்க அழிக்க மாளாமல் மீண்டும் மீண்டும் வந்து குவியும் இத்தகைய வணிகக் குறுந்தகவல்களும் நின்றுவிட்டன. செல்போன் சேவை தொடங்கி, 2ஜி, 3ஜி என வளர்ந்து, இந்தியாவில் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 61.2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்ட பின்னர்தான் நுகர்வோருக்கு இத்தகைய நிம்மதிப் பெருமூச்சுக்கே வழியேற்பட்டு இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இந்த எளிய நுகர்வோர் சேவையை உறுதிசெய்ய இத்தனை காலமா என்று எரிச்சல் ஏற்பட்டாலும், இப்போதாகிலும் துணிந்து செய்தார்களே என்று நன்றி சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் இந்த வேளையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஒரு சிம்கார்டு மூலம் ஒரு நாளைக்கு 100 குறுந்தகவல்கள் மட்டுமே அனுப்ப முடியும்' என்ற கட்டுப்பாடு குறித்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த 100 குறுந்தகவல் கட்டுப்பாடு என்பது இன்றியமையாச் சேவைகள் வழங்கி வரும் வங்கிகள், "ட்ராய்' அமைப்பில் பதிவு செய்துள்ள டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குக் கிடையாது என்று அரசு தெரிவித்திருந்தாலும், சாதாரண மக்களுக்கு இந்த 100 கட்டுப்பாடு மிக அநியாயம் என்பதாக இதை எதிர்ப்பவர்கள் பேசுகின்றனர். உண்மையிலேயே இது அநியாயமா அல்லது கட்டுப்பாடற்ற குறுந்தகவல் என்ற அறிவிப்பு மூலம் இளைஞர்களை வளைத்துப்போட்ட செல்போன் நிறுவனங்கள் இப்படியொரு எதிர்ப்பைக் கிளப்பிவிடுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், டிராய் தனது புதிய அறிவிப்பில், எந்தவொரு செல்போன் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக குறுந்தகவல் எண்ணிக்கைச் சலுகையை 100-க்கு மேலாக அறிவிக்கக்கூடாது என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. ஆகவே, இத்தகைய மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி செல்போன் நிறுவனங்கள் தங்கள் வணிகநோக்கத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் முயற்சியோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. பள்ளி தொடங்கி கல்லூரிவரை அனைத்து மாணவ மாணவியரும் தங்கள் செல்போனில் எந்த நேரம் பார்த்தாலும் ""பேன் பார்த்துக் கொண்டு'' (குறுந்தகவல் அனுப்புவதை பல வீடுகளில் இப்படித்தான் கேலியாகச் சொல்கிறார்கள்) இருப்பதற்கு எல்லா பெற்றோரிடமும் முணுமுணுப்பு இருந்துவரும் காரணத்தாலும், எல்லா வீடுகளிலும் வளர்இளம் பருவத்தினர், இளைஞர்களின் செல்போனில் இரவு முழுதும் குறுந்தகவல்கள் வந்து விழுந்துகொண்டே இருக்க, காலை எழுந்தவுடன் (குறுந்தகவல்) படிப்பு, பின் அழிப்பு, பதில் அனுப்பு என்பதிலேயே பொழுது விரயமாகிக் கொண்டிருப்பதைக்கண்டு வெளியில் சொல்ல முடியாமல் நொந்துகொள்ளும் பெற்றோர்கள் இந்தக் கட்டுப்பாட்டை வரவேற்கவே செய்வார்கள். இத்தனை காலமும் குறுந்தகவலில் இலவசமாகக் கேலி பேசிவந்த இளைஞர்கள், இனி நேரடியாக செல்போனில் பேசத் தொடங்கினால், மாதக்கட்டணம் அதிகமாகுமே என்கின்ற கவலை பெற்றோருக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் இருக்கிறது. இந்தச் செலவு பயம், இவர்களை அளவோடு பேசப் பழக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு இளம்பெண் தினமும் தன் காதலனுக்கு குறைந்தது 300 குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்ததாகவும், இப்போது இரண்டு சிம்கார்டு வாங்கினாலும் 200 மட்டுமே அனுப்ப முடியும் என்று கவலைப்படுவதையும் "என் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழாவுக்கு எப்படி எல்லோரையும் குறுந்தகவல் மூலம் அழைப்பேன்" என்று குடும்பத் தலைவி வருத்தப்படுவதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால், ஒரு பள்ளி அல்லது கல்லூரி தனது மாணவர்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ "மழையினால் பள்ளி விடுமுறை' போன்ற குறுந்தகவல்களை பல ஆயிரம் பேருக்கு அனுப்ப வேண்டும் என்றால் என்ன செய்வது? அவர்கள் டிராய் அமைப்பில் பதிவு செய்துகொண்டு, வங்கிகள் வாடிக்கையாளருக்குப் பணம் இருப்பு விவரங்களைத் தெரிவிப்பதைப் போலத்தான், இந்தச் சேவையைப் பெற முடியும் என்பதைப் பரவலாக விளம்பரப்படுத்த "ட்ராய்' முன்வர வேண்டும். குறுந்தகவல் 100 முடிந்த நிலையில் மிக அவசரமான குறுந்தகவல் அனுப்பியாக வேண்டும் என்ற நிலை வந்தால் நான் என்ன செய்வது? என்று அப்பாவித்தனமாகக் கேட்பதும், ஒரு மரணச் செய்தியை 100 பேருக்கு மட்டும்தான் நான் குறுந்தகவலாக அனுப்ப முடியுமா? என்பதும் கேட்பதற்கு நியாயமான கோரிக்கைபோலத் தோன்றினாலும், இத்தகைய சூழலில் அவர்கள் தொடர்புடைய நபர்களிடம் நேரடியாக தொலைபேசியில் பேச முடியும் என்பதையும், அவர்கள் மூலமாக இத்தகவலை மற்றவர்களுக்குக் குறுந்தகவலாகக் கொண்டு சேர்க்கும் வசதியும் இருக்கிறது என்பதையும் பார்க்கும்போது, இத்தகைய அச்சக் குரல்கள் அர்த்தமிழந்து விடுகின்றன. குறுந்தகவலை ஒரு நாளைக்கு 100 என்று நிறுத்திக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் சில உண்டு. அதிக நேரம் குறுந்தகவல் அனுப்ப எழுத்துகளை அழுத்தும் கட்டை விரலுக்கு சீக்கிரத்தில் நரம்பு வலி வருகின்றது என்று சொல்லப்படுகிறது. மேலும் குறுந்தகவலை, ஒவ்வொரு செல்போனுக்கு ஏற்ப, அவை அனுமதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை எழுத்துகளுக்குள் முடிக்க, வார்த்தைகளைச் சுருக்கிச் சுருக்கி, சொற்களின் அழகைக் குலைப்பதுடன், இளைஞர்கள் தங்கள் தேர்வு வினாத்தாள்களிலும் அத்தகைய வார்த்தைகளையே பயன்படுத்தும் அவலங்கள் குறையும். குறுந்தகவல் கட்டுப்பாடு இன்றைய சமுதாயத்தின் கடப்பாடு! நவீன தொழில்நுட்ப வசதிகள் நேரத்தை மிச்சப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமே தவிர, கால விரயத்துக்கும், உபயோகமற்ற கருத்துப் பரிமாற்றத்துக்கும் பயன்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கட்டுப்பாடே இல்லாத தொழில்நுட்ப வசதி, கடிவாளம் இல்லாத குதிரையைப் போல "ட்ராய்' எடுத்திருக்கும் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
Saturday, 1 October 2011
Monday, 5 September 2011
ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்!
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர்.
காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செகின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?
இதிலிருந்து என்ன தெரிகிறது? இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள். சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், "வீரப்பர்' கூட, திடீரென தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், "அவர்கள் வன்னிய சொந்தங்கள்' என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட வேண்டியது தானா?
தமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு, தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? அத்தனையையும் கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது தானே."குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது; நியாயமற்றது' என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.
இதே 11 ஆண்டுகள் நான்கு மாத தாமதத்தோடு, "உங்கள் கருணை மனு ஏற்கப்படுகிறது; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள்' என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தால், "அதெல்லாம் கிடையாது; நீங்கள் ரொம்ப தாமதமாக முடிவெடுத்துவிட்டீர்கள்; நாங்கள் சிறையில் தான் இருப்போம்' என, சொல்லியிருப்பார்களா?கருணை மனுவை பரிசீலிப்பதற்கு கவர்னருக்கோ, ஜனாதிபதிக்கோ காலக்கெடு எதுவும் சட்டத்தில் விதிக்கப்படவில்லை. சீக்கிரமாக பரிசீலிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம்; அவ்வளவே. கேபினட்டை யாரும் நிர்பந்திக்க முடியாது.காலாகாலத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தான் வலியுறுத்தி வருகின்றன. அதே நீதிமன்றங்களில் கூட, 25 ஆண்டுக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடுவதற்கில்லை.உணர்ச்சிகளின் உந்துதலில் தீர்ப்புகள் திருத்தப்படுமானால், குற்றங்களின் எண்ணிக்கை ஒருக்காலும் குறையப்போவதில்லை!
அரசியல்வாதிகளின் போட்டா போட்டி!மூவரின் மரண தண்டனையை மாற்ற வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போட்டா போட்டி அலாதியானது. இதற்காகவே கட்சி நடத்தும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எந்தப் பிரச்னை பற்றி எரியுமோ, அந்தப் பிரச்னை மீது, முடிந்த வரை எண்ணெய் ஊற்றுவர். தீர ஆராய்ந்து உண்மையை உணரும் நோக்கமில்லாமல், செங்கொடிக்கு சிலை வைக்கும் வரை சென்றுவிட்ட பிறகு, சொல்வதற்கு எதுவும் இல்லை.தமிழ், தமிழர் பற்றிய அரசியல் எனும்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பங்களிப்பு இல்லாமல் எப்படி? "ஆயுள் முழுவதும் தங்கள் தவறை எண்ணி வருந்தும் விதமாகத் தான் தண்டனை இருக்க வேண்டும்; அதனால், மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என, முதல் நாள், கருணை மனு விடுத்தார்.மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அ.தி.மு.க., அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுவிடுமோ என்றஞ்சி, "அவர்கள் மூவரையும் விடுதலையே செய்துவிட வேண்டும்' என, ஒரே போடாக போட்டுவிட்டார். தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருக்கும் முருகன் கூட இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.கொண்ட கொள்கையில் உடும்புப் பிடியாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சலனப்பட்டுவிட்டது அதிசயம் தான். முதல் நாள், "எனக்கெல்லாம் அந்த அதிகாரம் கிடையாது' என்றவர், மறுநாளே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.காங்கிரசின் பெயரைச் சொல்லி, அதன் கொடி நிறத்திலேயே, "சேனல்' நடத்துபவர்கள் கூட, இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. ராஜிவ் கொலையை நினைவுபடுத்துவதை விட, "ராத்திரி நேரத்து பூஜையில்' பாணி பாடல்கள் தான் கல்லா கட்ட உதவும் என தீர்மானித்துவிட்டனர் போல. எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு. ஆனால், இது ஓட்டாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.ஏனெனில், நான்கு பேர் கூடி நின்று கோஷம் போடுவதெல்லாம், மக்கள் கருத்தாகிவிடாது என்பதற்கு, கடந்த தேர்தல் முடிவுகளே சாட்சி.
ராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்?கடந்த 1991ம் ஆண்டு, மே 21 இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம் சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம் தீர்ந்துவிடும்.மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் - இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர்.இவர்களைத் தவிர, லதா கண்ணன், கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர, மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18. இவர்களில் அப்பாவிகள் 16 பேர்; சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இருவர்.
மரண தண்டனையும், மனிதநேயமும்:"இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், 21ம் நூற்றாண்டைப் போன்ற நாகரிக காலத்தில் மரண தண்டனை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்' என்பது, கொலையாளிகளுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளவர்களின் வாதம்.கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வது அல்ல; இந்த மூவரை மட்டும் விடுவிப்பது தான் என்று. ஒருவேளை, அவர்களது வாதம், ஒட்டுமொத்த மரண தண்டனைக்கே எதிரானது தான் என்றால், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும், மும்பையைச் சிதறடித்த அஜ்மல் கசாப்புக்கும் கூட மரண தண்டனை கூடாது என்பார்களா?
இந்தக் கேள்வியை, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். மரண தண்டனைக்கு எதிராக சண்டமாருதம் செய்தவர்கள் யாரும் சத்தமே காட்டவில்லை. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது; சட்டாம்பிள்ளைகளின் ஆட்சி தான் நடக்கும். உண்மையான காட்டாட்சியை அப்போது தான் காணமுடியும்.
மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிறபோதே அஞ்சாமல், படுபாதகச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்தும் செய்துவிட்டால், நெஞ்சுரம் கொண்டுவிட மாட்டார்களா? எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட மாட்டார்களா?"உலகின் 130 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது; 80 நாடுகளில் மரண தண்டனை இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை' என, புதிதாக முளைத்த சில, "புத்தர்கள்' புள்ளிவிவரம் அளிக்கின்றனர். அதன் பிறகு, அந்த, 210 நாடுகளிலும் கொலைகள் நடப்பதில்லையா, கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா, மக்கள் ஞானமடைந்துவிட்டனரா என்பன போன்ற கேள்விகளுக்கு, இவர்கள் பதில் அளிப்பதில்லை.
இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எல்லா கொலைக் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவதில்லை. அரிதினும் அரிதான வழக்குகளிலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்று வீசியது, அரிதான வழக்கில்லை எனில், வேறென்ன?தவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக் குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக கழுத்தையே அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும் கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் கசாப்களுக்கும், பார்லிமென்டையே பதம் பார்க்கத் துணிந்த அப்சல்களுக்கும் மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவது?அவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத் தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொக்கரிக்க மாட்டார்களா?
தண்டனைக்கு உள்ளானவர்களை, மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று ஒரு தரப்பு கொடி பிடிக்கத் துவங்கியுள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ, போதையின் பிடியிலோ இல்லாமல், நன்கு திட்டமிட்டு, ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது தான் ராஜிவ் படுகொலை. இறந்தது அவர் மட்டுமல்ல; அவரது தொண்டர்கள்; பாதுகாப்புக்கு நின்றவர்கள் என மேலும் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா? அவர்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டப்பட்டிருக்க வேண்டாமா?இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால், அவற்றுக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது. ஒரே வரியில் சொல்வதானால், மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே காட்டப்பட வேண்டியது!
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்: ராஜிவுடன் கொலையுண்ட ஒரே அரசியல்வாதி, லீக் முனுசாமி, 65, காங்கிரசின் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலராக இருந்தவர். அதனாலேயே லீக் முனுசாமி என்றழைக்கப்பட்டவர். இவரது மகன் , 61, இன்றளவும் தந்தையின் பட்டத்தையும், துக்கத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறார்.
சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட சோகத்தையும், தற்போதைய நிகழ்வுகளையும் பற்றி அவர் கூறியதாவது:ராஜிவ் கொல்லப்பட்ட அதே இரவில், மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இருந்தேன். தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த, குடும்பத் தோழி ஒருவர், எங்கள் வீட்டுக்கு போன் செய்து, "ராஜிவ் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன; உங்கள் தந்தை எங்கே?' என விசாரித்தார்.தேர்தல் பணிக்காக, எங்கள் தந்தை ஒரு வாரமாக அங்கே தான் முகாமிட்டிருந்தார். பதறியடித்து, போளூர் வரதன் வீட்டுக்குச் சென்றோம். அவர், உண்மையைச் சொல்லத் தயங்கி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார்.எந்த மருத்துவமனை எனத் தெரியவில்லை. சாலையெங்கும் நெருப்புக் கோளம். திரும்பிய இடமெல்லாம் கலவரக் காட்சி. அரை கிலோ மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரம். காரின் முகப்பில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கொடிகளைக் கட்டி, அப்பல்லோ, அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் என, அந்த நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடினோம்.அதிகாலை 3 மணிக்கு, வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. "வானொலியில், ராஜிவோடு இறந்தவர்களின் பட்டியலில், முனுசாமி என்ற பெயரையும் சொல்கின்றனர். அது நம் தந்தையாக இருக்குமோ' என, கதறினர்.
அப்படியே ஸ்ரீபெரும்புதூருக்குத் திருப்பினோம். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மருத்துவமனையில் தந்தையின் உடல் - ஆம், உடல் - இருப்பதாகக் கூறினார். தந்தையைப் பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு கிழிந்திருந்தது. "ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக் கூடாது' என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல. தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய் அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது.எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய், முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என, அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும் நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார்.இப்படி எத்தனையோ குடும்பங்கள்; எத்தனையோ துயரங்கள். அத்தனையையும் மறந்துவிட்டு, திடீரென கிளம்பியிருக்கிறது மனிதாபிமான கோஷம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம், நியாயம் கிடைத்திருக்கிறது என நினைத்திருந்த நேரத்தில், அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாய்ப் போன ராஜிவ் கொலை வழக்கை, இம்மண்ணின் மக்களால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டவர்களுக்கோ, அடிதடி முற்றி மரணம் ஏற்பட்டிருந்தாலோ மன்னிப்பு வழங்கலாம். இது, திட்டமிட்ட படுகொலை. பிரதமர் வி.பி.சிங் கூட்டத்திலேயே ஒத்திகை பார்க்கப்பட்ட படுபாதகம். அன்னிய நாட்டு சதியோடு நடந்த கொடூரம்.
ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்றவர்களை, சாதாரண கொலையாளிகளோடு கூட ஒப்பிடக் கூடாது. சட்டம் எல்லாருக்கும் சமம் என்று சொல்லிவிட்டு, இவர்களை மட்டும் மன்னிப்பது நியாயமில்லை. அப்படியானால், ராஜாவையும், கனிமொழியையும், கல்மாடியையும் கைது செய்வது எதற்காக? ஊழல் செய்தவர்களுக்கே தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம்?தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்... 1991க்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கூட்டம், பல பெயர்களில், பல போர்வையில் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், தேசத் தலைவர்களின் இழப்பைத் தடுக்கவே முடியாது போகும்.இவ்வாறு குமுறி முடித்தார், லீக் மோகன்.
அதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம் அடங்கவில்லை.
"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?""எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா? முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா?""இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா?'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்.""அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். ""எங்கள் குடும்பத்துக்கு நடந்த, "துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?'' என, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை
Friday, 2 September 2011
அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று.
ஆகஸ்டு 16 ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.
என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்” அதாவது பட்டினிப் போர் என்று அறிவித்தார் ஹசாரே.
தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன், ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.
“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்” என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.
குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.
இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.
தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக, சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.
ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும் இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள். இன்று தனியார்மயக் கொள்கைகள், ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன. எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.
ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.
கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.
கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில் ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண் கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, “நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்” என்று அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, “அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக்கொடி, அரசியலையே வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!
ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், “உணவைத் துறப்பேன்” என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, “மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்” என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, “ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்” என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.ஆகஸ்டு 16 ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.
என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்” அதாவது பட்டினிப் போர் என்று அறிவித்தார் ஹசாரே.
தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன், ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.
“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்” என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.
குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.
இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.
தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக, சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.
ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும் இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள். இன்று தனியார்மயக் கொள்கைகள், ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன. எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.
ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.
கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.
Monday, 29 August 2011
Monday, 22 August 2011
Tuesday, 9 August 2011
வேஷம் கலைகிறது!
தனது கடன்வரம்பை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்ட இரு தினங்களில், கடன்பெறும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், மிக உயர்ந்த இடத்தில் (ஏஏஏ) இருந்த அமெரிக்கா, தற்போது ஏஏ+ என்று சற்று தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது. உலகுக்குச் சந்தைப் பொருளாதாரம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் என்றும் மக்கள் சேமிப்பதைவிட செலவழிப்பதை ஊக்குவிப்பது தான் ஒரு பொருளாதாரத்தின் உயிர்த்துடிப்பு என்றும் பாடம் சொல்லித்தந்த அமெரிக்கா இப்போது தள்ளாடுகிறது. பெரியண்ணன் பாதையில் வீரநடை போட்ட நாடுகள் - இந்தியா உள்பட - இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றன. வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தடுமாறுகின்றன. தடுமாற இருந்த பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க அமெரிக்காவில் மிகப் பெருமளவில் வீட்டுக் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடனை மீட்கவும் முடியாமல், பறிமுதல் செய்த வீடுகளை விற்கவும் முடியாமல் வங்கிகள் தடுமாறியதால், அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை ஒருவழியாகச் சமாளித்து, வீட்டுக்கடன் வாங்கி அவதிப்படுபவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் அதற்கான மானியங்களையும் மேற்கொண்டு வந்தநேரத்தில், அமெரிக்காவின் கடன் வரம்பை உயர்த்தி, மேலும் கடன் வாங்குவதன் மூலம்தான் இந்தச் சரிவை சமாளிக்க முடியும் என்று அந்நாட்டு வல்லுநர்கள் அறிவுரை கூறியதால், வேறுவழியின்றி அமெரிக்க அதிபர் ஒபாமா மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, கடன்பெறும் வரம்பை 2 லட்சம் கோடி டாலராக அதிகரிப்பதும், செலவுகளை 3 லட்சம் கோடி டாலராகக் குறைப்பதும்தான். இந்தப் பிரச்னையைச் சமாளித்துவிட்டதாக அமெரிக்க அரசுத் தரப்பில் கூறிக்கொண்டாலும், பொருளாதார நிபுணர்கள் இந்த நிலை அமெரிக்காவை மேலும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குக் கொண்டு செல்லும் என்று எச்சரிக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணம் இதுதான்: ஒரு நாட்டின் நிதிப் பற்றாக்குறையை இரு வழிகளில் மட்டுமே சமாளிக்க முடியும். ஒன்று - வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவது. இரண்டாவதாக - மக்களுக்காகச் செலவிடப்படும் தொகையைக் கட்டுப்படுத்துதல். இந்த இரண்டில், வரிகளை உயர்த்தினால் பாதிக்கப்படுவது அமெரிக்காவின் செல்வந்தர்களும், பெரும் தொழில்நிறுவனங்களும்தான். ஏனென்றால் அவர்கள்தான் வரியைச் செலுத்தியாக வேண்டும். ஆனால், அவர்கள் கூட்டணி அமெரிக்காவில் மிக உறுதியாக உள்ளது என்பது மட்டுமல்ல, அமெரிக்கா போன்று சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் நாடுகளில் அவர்கள்தான் அரசையே வழிநடத்துகிறார்கள். ஆகையால் இரண்டாவது வழியில் அடியெடுத்து வைத்திருக்கிறது அமெரிக்கா. மக்களுக்காகச் செலவிடப்படும் நிதி என்பது, வெறும் நிர்வாகச் செலவுகள் மட்டுமல்ல. விவசாய உற்பத்திக்கான மானியம், மருத்துவச் சிகிச்சைகளுக்கான வசதிகள் மற்றும் மானியம், வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை, வட்டித் தள்ளுபடி என்கிற இத்யாதி செலவுகளைத்தான் தற்போது அமெரிக்கா கட்டுப்படுத்தப்போகிறது. இந்தச் செலவுகளை உடனே அமல்படுத்தாமல் படிப்படியாகக் குறைத்துக்கொள்வோம் என்று அமெரிக்க அரசு சொன்னாலும்கூட, இது சராசரி அமெரிக்கப் பிரஜையை பெருமளவில் பாதித்து, அவர்களது அதிருப்தியைத் தேடித்தரும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது அமெரிக்க தொழிற்கூடங்களுக்கு அதிகச் சலுகைகள், வரிக் குறைப்பு எல்லாமும் அறிவிக்கப்பட்டது. வரியை மெல்லமெல்ல உயர்த்தியிருந்தால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அமெரிக்கா கொஞ்சம் மீண்டிருக்கும். ஆனால், செல்வந்தர்கள் கூட்டணி இதைச் செய்யவிடவில்லை. இப்போது மக்களுக்கான நலஉதவிச் செலவுகளைக் குறைத்தால் அமெரிக்க மக்கள் அதை ஈடுசெய்ய என்ன செய்வார்கள்? ஏதாவது கூடுதலாக வேலை செய்தாக வேண்டும். ஏற்கெனவே வேலையில்லாதவர்கள் நிறையப் பேர் இருக்கும்போது, சலுகைகளை இழந்து குடும்பச்செலவைச் சமாளிக்க விரும்புவோரும் இரண்டாவது வேலைதேடத் தொடங்கினால் என்ன ஆகும்? சம்பளத்தைக் குறைத்து, வேண்டுமானால் வந்து வேலைசெய் என்பார்கள். உழைப்புச் சுரண்டலுக்குத்தான் இப்போதைய முடிவு கொண்டுசெல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வருவாய் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் உழைப்பாளர்களின் வருமானம் 12 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த முரண்பாடு சரியல்ல என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இன்னொரு புள்ளிவிவரத்தையும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புக் குறைந்துகொண்டே போகிறது என்கிறார்கள். 2007-ல் வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞர்கள் எண்ணிக்கை 63 விழுக்காடு. 2009-ல் 59.4 விழுக்காடு, 2011-ம் ஆண்டில் 58.2 விழுக்காடு. பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இன்றைய காலக்கட்டத்திலும்கூட வேலைவாய்ப்புக் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இதெல்லாம் அமெரிக்க அரசுக்குத் தெரியாமலா இருக்கும். நிச்சயம் தெரியும். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் அரசியல்வாதிகளின் பிரசார செலவுக்குப் பணம் கொடுப்போர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். இதற்கு கணக்கு, தணிக்கை எல்லாமும் உண்டு. ஆகையால் அங்கே வல்லான் வகுத்ததே வாய்க்கால். இந்தச் சரிவிலிருந்து அமெரிக்கா மீளுமா, சமாளித்து எழுமா என்பது போகப் போகத் தெரியும். இப்போது ஒன்று மட்டும் தெரிகிறது: வேஷம் கலைந்துவிட்டது!
Thursday, 4 August 2011
தமிழக பட்ஜெட் 2011 முக்கிய அம்சங்கள் :
- சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்.
- ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும்.
- சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படுத்தப்படும்
- போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்க ஏற்பாடு.
- நடப்பு நிதியாண்டில் கலப்பின மாடுகள் வழங்க ரூ.56 கோடி ஒதுக்கீடு.
- தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த புதிதாக 10 கட்டடங்கள் கட்டத் திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு.
- 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும்
- ஏழை குடும்பங்களுக்காக தலா 4 ஆடுகள் வீதம் வழங்க ரூ.135 கோடி ஒதுக்கீடு.
- நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.
- ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்க வழி வகை செய்யப்படும்.
- ரூ.130 கோடியில் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித் தரப்படும்.
- காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்டப்படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி.
- சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
- சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரு.117 கோடி ஒதுக்கீடு.
- சென்னை மாநகர காவல்துறையுடன் புறநகர் காவல்துறை இணைக்கப்படும்.
- காவல்துறையை நவீனப்படுத்த ரூ.51 கோடி ஒதுக்கீடு.
- 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கப்படும்.
- கூட்டுறவு விற்பனை இணையத்துக்கான வட்டியில்லா முன்பணம் ரூ.150 கோடியாக உயர்வு.
- காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை.
- வட்டியில்லா பயிர்க்கடனாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்க இலக்கு.
- கூட்டுறவுத் துறை மூலம் கடன்பெற்று உரிய முறையில் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.
- நெல்லை, ஒரத்தநாடு பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள்.
- ஏரி, அணை, கால்வாய்கள் ரூ.367 கோடி செலவில் சிரமைக்கப்படும்.
- நாகை, பழையாறில் நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
- ரூ.74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
- 13 மீன் பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
- விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம். அதன்படி, நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு செய்யப்படும்.
- ஆழ்கடல் மீன் பிடிப்பு ஊக்குவிக்க நடவடிக்கை.
- சேலம் மற்றும் திருநெல்வேலியில் சைபர் க்ரைம் குற்றப்பிரிவு நிறுவப்படும்.
- மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும்.
- நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)


