பதிவுகள்

Sunday, 14 February 2010

நானும் ஒருவன்...!

நானும் ஒருவன்........
ஜனிக்கும் தருணங்களில்
அனைத்து உறவுகளிருந்தும்
அனாதையாக்கபட்டிருக்கின்றோம் ,
தனியனாய் வாழும்சாபம்
கைநிறைய ரியாலும்,
கண்கள் நிறைய ஏக்கமும்
அன்பெனவும் அரவணைப்பெனவும் அறியாது
ஏக்கத்துடன் மனம் வழியவிட்டு கொண்டிருக்கிறதென
வலிகொண்டு வாழும் அரேபிய அகதிகளில்
நானும் ஒருவன்...

Monday, 4 January 2010

சந்தோஷ, சந்தேகங்களுடன்........

இதுதான் முதல்முறையா...? ...இல்லை
இதற்குமுன் வேறுநாடு போயிருக்கியா..?
பராவாயில்லை எல்லாம் பழகிபோகும் ...
கேம்ப்வாசிகளின் ஆறுதலோடு
இனிதே துவங்கியது கேம்ப்வாழ்க்கை...
சந்தோஷ, சந்தேகங்களுடன்
எனக்கும், என்னைபோலுள்ள
வளைகுடா வாலிபர்களுக்கும்......

Monday, 28 December 2009

விழியின் வலிகளோடு...

இருப்பிடத்தை விட்டுவிட்டு
விருப்பத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு
மறுப்பை ௬ற வழியில்லாமல்...
பொறுப்புகளை சுமந்து புறப்பட்டேன்....
அரபுலகம் நோக்கி.......

Friday, 15 May 2009

தோல்விகள் புதிதல்ல!

அதனாலதான்
உன்னை மறக்க
வேண்டும் என்று
நினைக்கும் போது கூட
மனதோடு போராடி
தோற்று போகிறேன்
நீ என்னை
மணக்க வேண்டுமென்று
உன் மனதோடும்
போராடி தோற்றுப்
போய்விட்டேன்
தோல்விகள் ஆயிரம்
கண்டும் துவண்டு
விடாத இதயத்தை
கொடுத்த இறைவனை
இறைஅஞ்சுகிறேன்.

Wednesday, 21 May 2008

இன்னும் விழித்துக் கொண்டு இருக்கிறது...!

அவள் என்னை
பிரிந்த விட்டால் என்பது
எனக்கு தெரியும்
பாவம் என்
விழிகளுக்குத்
தெரியாது
அது அவளுக்காக
இன்னும் விழித்துக்
கொண்டு இருக்கிறத

Friday, 1 February 2008

நவீனமாய் நகரம்..!

உழைத்து முடித்துவிட்டு,
கூலிக்காய்,வரிசை பேணுகிறான்,...
நவீனமாய்.........,
காட்சிப்படுத்துகிறது நகரம்,
ஏ.டி.எம் முன்...

Sunday, 30 December 2007

பாக்கியசாலி ...!

வயக்காட்டில் விளையாடி
ஓணாண் பிடித்து
வாய்க்காலில் குளித்து
எதிர்வீட்டில் பல் இளித்து
எப்படியோ படித்த நான்
ஓடிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில நாட்கள் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
தங்கை முகம் நான் பார்த்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா?அவனே
பாக்கியசாலி ...!