பதிவுகள்

Showing posts with label நண்பனின் மினஞ்சலில் இருந்து. Show all posts
Showing posts with label நண்பனின் மினஞ்சலில் இருந்து. Show all posts

Monday, 12 December 2011

ஆட்டம் போடும் அணு அரசியல்!

ஜெர்மனி அணு உலைகளை மூடுவதாக அறிவித்திருப்பதற்குக் காரணம், அந்நாட்டின் கூட்டணி அரசியல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் ஜெர்மனி அதன் அணு உலைகளை மூடிவருகிறது எனச் சொல்லி வருகிறார்கள். ஜெர்மனியில் இருந்த 19 அணுமின் நிலையங்களில் காலாவதியான 2 நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 17 உலைகளை இன்னும் 12 ஆண்டுகள் நடத்த ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெர்மன் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும், அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் ரெய்னரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி அறிவித்தனர்.

ஜெர்மனியைப் போலவே சுவீடனும் அணுமின் நிலையங்களை மூடப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி பழுதடைந்த உலைகளுக்குப் பதிலாக புதிய உலைகளை நிறுவிக்கொள்ள சுவீடன் அரசு அனுமதி அளித்ததன் மூலம் அணுமின் நிலையங்களுக்கு எதிரான சுவீடனின் கொள்கை முடிவுக்கு வந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

சுவீடன் அரசும், ஜெர்மனியைப்போல் இல்லாமல், ‘நிதானமாக’ முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. அணு மின் நிலையங்களை மூடுவதாக ஜெர்மனி அறிவித்தது ஏன்? அதற்குப்பின் இருப்பது ஜெர்மனியின் அரசியல்.

இந்தியாவைப்போல பல கட்சிகள் கொண்ட நாடு ஜெர்மனி. அவற்றுள் முக்கியமானவை இரண்டு. ஒன்று, கிறிஸ்டியன் டெமாக்ரெட்டிக் யூனியன் (CDU), மற்றது, சோஷியல் டெமாக்ரெட்டிக் பார்ட்டி. (SDP). இவற்றைத் தவிர , ஃபிரீ டெமாக்ரெட்டிக் பார்ட்டி (FDP), இடதுசாரிகள்,கிரீன் பார்ட்டி என வேறு சில சிறிய கட்சிகளும் இருக்கின்றன. கிரீன் சுற்றுச்சூழலை மையமாகக்கொண்டு செயல்படும் கட்சி.

பல ஆண்டுகளாக ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு பெரிய கட்சி மற்றொரு சிறிய கட்சியோடு சேர்ந்து அரசமைப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது CDU, சிறிய கட்சியான FDPயோடு சேர்ந்து ஆட்சியில் இருக்கிறது

1998லிருந்து 2005 வரை இரண்டு முறை கிரீன் பார்ட்டி பெரிய கட்சியான SDPயுடன் சேர்ந்து ஆட்சியில் இருந்தது. அப்போது அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும்இருந்தார். ஜெர்மன் சட்டங்களின்படி ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 5 சதவீத வாக்குகள் வாங்க வேண்டும். கிரீன் பார்ட்டி அந்தத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக வாங்கியிருந்தது.

விரைவிலேயே சிவப்பு - பச்சைக் கூட்டணியில் (ஜெர்மனியில் கூட்டணிகளை அந்தந்தக் கட்சிக் கொடிகளின் வண்ணங்களை வைத்தே குறிப்பிடுகின்றனர். SDPயின் நிறம் சிவப்பு; CDUயின் நிறம் கறுப்பு; FDPயின் நிறம் மஞ்சள்) பிரச்சினை முளைத்தது. யுகோஸ்லேவியாவிலிருந்து செர்பியா, கொசாவா பிரிந்தபோது கொசாவா நாட்டிற்கு ஜெர்மன் அரசு படைகளை அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிரீன் கட்சியிலிருந்து பலர் விலகினார்கள். கட்சி, அடுத்து நடந்த மாநிலத் தேர்தலில் தோல்விகளைச் சந்தித்தது.

அப்போதுதான் கிரீன் கட்சி, அணுமின் நிலையங்கள் விஷயத்தைக் கையில் எடுத்தது. SDPக்கு தர்மசங்கடமாகப் போனது. ஏனெனில், அதன் உறுப்பினர்களில் பலர் அதை ஏற்கவில்லை. ஆனால், அரசைக் காப்பாற்றிக்கொள்ள மெல்ல மெல்ல, அதாவது 2010க்குப் பின், அணு உலைகளை மூடுவதற்கு ஒப்புக் கொண்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, இப்போது ஆளும் கட்சியாக உள்ள CDUவும் அன்று அணு உலைகளை மூடுவதை எதிர்த்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், கிரீன் பார்ட்டி கணிசமான வெற்தீவூளப் பெற்றது. ஒரு வளம் மிகுந்த மாநிலத்தில், அறுபது ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த CDUயை (அதுதான் இப்போது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி) வீழ்த்தி, ஆட்சியைக்கைப்பற்றியது. கட்சி துவங்கி, 30 ஆண்டுகளில் இப்போதுதான் அது முதல் முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.

CDUவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம், வாகனங்களில் பெட்ரோலோடு 10 சதவீதம் ஆல்கஹாலையும் கலந்து பயன்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன், அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக விளைநிலங்களில் தானியங்களுக்குப் பதில், பயோ ஃபூயலுக்கு உதவும் பயிர்களை மக்கள் பயிரிட ஆரம்பித்து விடுவார்கள் என எதிர்ப்பு எழுந்தது. அதனால், அது போன்ற நிலங்களுக்கு வரியை உயர்த்தியது அரசு. சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

கீரின் பார்ட்டியின் வெற்றியைக் கண்டு உஷாரான CDU, அவர்களது கோரிக்கையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தது. அதாவது, முன்னால் அணு உலைகளை மூட எதிர்ப்புத் தெரிவித்த CDU, இன்று அணு உலைகளை 2022க்குள் படிப்படியாக மூடப் போவதாக அறிவித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஜெர்மனி எடுத்துள்ள முடிவுக்குப் பின்னால் இருப்பது, சுற்றுச்சூழல் அல்ல, பாதுகாப்பு அல்ல, கூட்டணி அரசியல்.

ஆனால், அந்த முடிவுக்கு எதிரான முணுமுணுப்புகள் கிளம்பியிருக்கின்றன. அணுமின் உலைகளை மூடிவிட்டு காற்றலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால், ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் கடலோரமாகக் காற்றாலைகளை அமைக்க வேண்டும். இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஜெர்மனியின் தொழில் நகரங்களான மியூனிக், ஸ்ட்ரட்கார்ட் ஆகியவற்றுக்கு அருகில் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. எனவே, வடக்குப் பகுதியிலிருந்து உயர் வோல்ட்டேஜ் கேபிள்கள் அமைத்து, மின்கோபுரங்கள் நிறுவி, மின்சாரத்தைஎடுத்துச் செல்ல வேண்டும். அப்படி கேபிள்கள் அமைப்பதற்கும், மின்கோபுரங்கள் நிறுவுவதற்கும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அரசு முழிக்கிறது.

வேறு ஒரு பிரச்சினையும் எழுந்துள்ளது. மின்சாரத்தை வீணடிக்காத வகையில் கட்டிடங்களை அமைப்பதன் மூலம், 10 சதவீதம் மின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என அரசு சொல்கிறது. அதெல்லாம் பேசுவது சுலபம், ஆனால், வேலைக்காகாத காரியம் என சிலர் சொல்கிறார்கள். இது, கடைசியில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில்தான் போய் முடியும். கரியைப் பயன்படுத்துவதை அதிகரித்தால், அது வளி மண்டலத்தில் மாசை அதிகரிக்கும், அதனால், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அரசில் இருப்பவர்கள்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறார்கள். அணுமின் நிலையங்களை ஜெர்மனி மட்டும்தான் மூடுகிறது. அண்டை நாடான பிரான்ஸ் மூடவில்லை. இன்னொரு அண்டை நாடான போலந்து மேலும் இரண்டு உலைகளைத் திறந்திருக்கிறது. எனவே, இனி வரும் நாள்களில் ஜெர்மனி, பிரான்சிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் (ஏற்கெனவே தேவை உச்சத்திற்குப் போன நாட்களில் அது அவ்வாறு வாங்கியிருக்கிறது). நாட்டின் பொருளாதாரம் அயல் நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்பது அவர்களது கவலை.

முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கிறது ஜெர்மனி.

Saturday, 10 December 2011

கனிகிற வேகத்தில் வெம்பி விட்டீர்களே!



சென்னை விமான நிலையம்














சிஐடி காலனி






கனிமொழியை பார்க்க வந்த   திமுக 
முன்னணி தலைவர்கள்  









பகுத்தறிவுப் பகலவன் வீட்டில் உடைக்கப் பட்ட திருஷ்டி பூசணிக்காய்


ஆரத்தி

ஜெகதரட்சகன் வந்த 2 கோடி ரூபாய் போர்ஷ் கார்

கனிமொழியை புகைப்படமெடுக்க போட்டி போடும் பத்திரிக்கையாளர்கள்

ஒரே நாளில் ஸ்டாலினை விட "பெரிய" தலைவரான கனிமொழி



முடியலடா ..... !!!!!


width=/divquot;,MsoNormal

Tuesday, 29 November 2011

தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!

தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள்.

இதற்க்கெல்லாம் நீங்கள் சொல்லும் காரணம், தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதுவே. கடந்த ஐந்து வருடமாக தமிழகத்தை ஆண்ட கருணாநிதியே, "பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம், தமிழக மின்சார வாரியம் சுமார் 45000 கோடி அளவுக்குக் கடனில் தத்தளிக்கிறது. நான் உட்பட தமிழக பாமர மக்களின் சந்தேகம், கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் தானா பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.?" என்று கேட்டுள்ளார். அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கருணாநிதிக்கு முன்னர் நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் இவையெல்லாம் லாபத்தில் இயங்கி வந்தனவா?

பேருந்துக் கட்டண உயர்வால் தமிழக மக்கள் படும் இன்னல்கள் உங்கள் பார்வைக்கு வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஊருக்குச் சென்று விட்டு சொந்த ஊர் திரும்ப கையில் பேருந்துக் கட்டணத்துக்கான முழுத் தொகையும் இல்லாமல் போக வேண்டிய இடத்துக்கு முன்னரே இறங்கி நடந்து சென்றதாகவும், பேருந்தில் ஏறிய சிலர் கண்டக்டர் சொன்ன டிக்கெட் ரேட்டைக் கேட்டு மாரடைப்பு வராத குறையாக இறங்கிய செய்திகளும் உங்கள் பார்வைக்கு வந்தனவா என்று தெரியவில்லை.

இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராததாலேயே கட்டண உயர்வு என்று அறிக்கை விடும் முதல்வர் அவர்களே, மத்திய அரசு நிதியை நம்பித்தானா இலவசத் திட்டங்களை அறிவித்தீர்கள்?. இல்லை, இலவச திட்டங்களை அறிவிக்கும் முன்னர் மத்திய அரசைக் கேட்டு அவர்களின் உறுதிமொழிகளைப் பெற்ற பின்னர் அறிவித்தீர்களா?. உங்களிடம் யார் கேட்டது இலவசம்?. பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலைகளை உயர்த்தாமல் இருந்தால் நீங்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தரும் இலவசத்தை நாங்களே வாங்கிக் கொள்வோமே. உங்கள் அமைச்சர் பெருமக்களுக்குக் கிடைக்கும் கமிசனைப் பெறவா இது போன்றதொரு இலவச யுத்தி?.

20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாலும் அரசு கேபிளை ரூ 70 விலையில் ஒளிபரப்புவதாலும் தமிழக மக்களின் மனங்கள் மகிழ்ந்து விடப் போவதில்லை. பேருந்துக் கட்டணம் என்ற பெயரில் தினம் பெறும் கூலியில் பாதியையும் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் மீதியையும் வாங்காமல் இருந்தாலே போதும்.

நஷ்டத்தை ஈடுகட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்த ஒரே வழி விலையை உயர்த்துவது தான். இவர்கள் எல்லாம் எப்படி இந்திய ஆட்சிப் பணி முடித்து வந்தார்கள் என்பது தெரிய வில்லை. தமிழக பொதுத் துறை நிறுவனங்களில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு முடியும் வரை நஷ்டத்தைச் சமாளித்து விட்டு கடைசி முயற்சியாக 15 முதல் 25 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தி இருக்கலாம். ஒரேயடியாக பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டீர்கள். சரி தான். ஐந்து வருடங்கள் கடந்து மீண்டும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற நிலையில் 10 வருடத்துக்கும் சேர்த்து ஏற்றி விடுங்கள் என்றுகூட உங்கள் ஆலோசனைக் குழு உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி இருக்கக் கூடும்.

ஒரு நாளாவது சென்னை மாநகரப் பேருந்துகளில் நீங்களும் உங்கள் அமைச்சர் பெருமக்களும் போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குப் பயணம் செய்து பாருங்கள். தமிழக பேருந்துகளின் அவல நிலை உங்களுக்குத் தெரிய வரும். கேரள மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப் படும் ஏழை முதல்வர்கள் போன்று தமிழ்நாட்டில் ஏழைகள் யாரும் முதல்வராகத் தேர்வு செய்யப் படாததே எங்களின் அவல நிலைக்குக் காரணம்.

அடுத்து தமிழக குடிமகன்களின் துயர் துடைக்க உங்கள் ஆட்சியில் எலைட் பார்களைத் திறக்க உள்ளதாக செய்திகள் மூலம் அறிந்தேன். வெளிநாட்டு மதுவகைகள் பரிமாறப் படும் எலைட் பாருக்குள் நுழையவே ரூ 50 கட்டணமாமே. மகத்தான திட்டத்தைக் கொண்டு வர உள்ள தமிழக முதல்வரே வரலாற்றில் உங்கள் பெயர் நிச்சயமாக இடம்பெறும்.

தினக் கூலி பெறுவோரில் பாதிபேர் இப்போது டாஸ்மாக் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். இனி எலைட் திட்டமும் வந்து விட்டால் உள்ளூர் சரக்கு அடித்து போரடித்து விட்டது என்று வீட்டில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மனைவி ஒன்று இரண்டு என சேர்த்து வைக்கும் பணத்தை லவட்டிக் கொண்டு போய் எலைட் பாரில் போய் வெளிநாட்டு சரக்கு அடிக்கும் வாய்ப்பைத் தமிழ்க் குடிமகன்களுக்கு ஏற்படுத்தி தர உள்ளீர்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

பல்வேறு நலத் திட்டங்களை உங்கள் பொற்கரங்களால் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் அவர்களே, வரலாற்றுத் திட்டமாம் எலைட் பார் திட்டத்தையும் உங்கள் பொற் கரங்களால் தொடங்கி வைத்து தமிழ்க் குடிமகன்களின் வயிற்றில் வெளிநாட்டு மதுவை வார்ப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

வாழ்க அண்ணா நாமம்; வளர்க எம்.ஜி.ஆர் புகழ்; எக்கேடுகெட்டோ ஒழியட்டும் தமிழக மக்கள்!

- மொக்கையன்

Monday, 28 November 2011

கனிமொழிக்கு ஓர் கடிதம் !


இலக்கிய வீதியில் உலா வர வேண்டிய நீங்கள், திகார் சிறைக்கும் பாட்டியாலா கோர்ட்டுக்கும் இடையே இருக்கும் வீதிகளில் திரிந்துக் கொண்டிருப்பது தான் கொடிய விதி. அதிலே முடங்கிப் போகமாட்டீர்கள் என்பது தெரியும்.

இங்கே இருந்து புதிய பாதையை தேர்வு செய்யப்போகிறீர்களா. அல்லது பழைய பாதையில் பயணிக்கப் போகிறீர்களா என்பதுதான் இக்கடிதத்தின் நோக்கம்.

இளவரசன் சித்தார்த்தன் போதி மரத்தின் கீழே ஞானம் பெற்றான் புத்தன் ஆனான் ! ஆனால் ஊழல் புகாருக்கு அவன் ஆளாகவில்லை. எந்தவித சொர்க்கபுரிகளும் இல்லாத காலத்திலேயே, அரச வாழ்க்கையை துறந்தவன் அந்த இளவரசன்.

நீங்களும் கலைஞரின் ராசாத்தி (ராணி என்று தானே அர்த்தம்) பெற்றதால் இளவரசிதான். திகார் சிறையில் இருந்ததால் ஞானம் பெற்றீர்களா? எதிர்காலம் தான் அதை சொல்லும்.

தயாளு குடும்பத்தின் வாரிசுகளை என் இலக்கிய வாரிசு என்று சொன்னாரா கலைஞர்? அரசியல் வேண்டாம் என்பதுதானே அதன் அர்த்தம்? பக்கம் பக்கமாக எழுதி இலக்கியத்தை படைக்க வேண்டிய உங்களை பார்த்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதி குவிக்கின்றதே?

பத்திரிகையாளர், பெண்ணியவாதி, இலக்கியவாதி, அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் என்ற குடையின் கீழ் நீங்கள் இருந்த காலத்தை எண்ணிப் பாருங்கள்.

எத்திராஜ் கல்லூரியில் படித்ததும், 1989ம் ஆண்டு மிக விமரிசையான திருமண வாழ்க்கை. அதிலே கசப்பு ஏற்பட்டதும் விலகி இருந்தீர்கள். கவிதை புனைய முற்பட்டீர்கள். மெல்ல பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்றதும், தன் பரம எதிரியாக கருதும், ‘தி இந்து’ பத்திரிகையில் உங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார் உங்களது தந்தை.

எளிமையின் வடிவாகவே, உங்களை பத்திரிகையாளர்கள் பார்த்தார்கள். பந்தா இல்லாத உங்கள் நட்பில் அன்று இருந்தவர்கள், ‘நீங்கள் பெரிய பத்திரிகையாளராக வரவேண்டும். உங்கள் அப்பாவையே திணறடிக்கும் கேள்விகளை கேட்டு பேட்டி எடுக்க வேண்டும்’ என்று சொன்னது ஞாபகமிருக்கும் என்றே கருதுகிறேன்.

இதற்குள் தி.மு.க. 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்துவிடுகிறது. முதல்வரின் மகளாக இருந்துக் கொண்டு, தமிழ்நாட்டில் அதுவும் ‘தி இந்து’ பத்திரிகையில் வேலைக்கு போக வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அந்த நேரத்தில், நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் முன்னிலை பெற்றுவிடக்கூடாது (அப்பவேவா) என்று கோபாலபுரத்தில் பேசிக் கொண்டதாக தகவல்.

உடனே, சிங்கப்பூரில் இருக்கும் ‘தமிழ் முரசு’ பத்திரிகையில் வேலை பார்க்கும்படி அப்பா சொன்னதன் பேரில் செல்கிறீர்கள். அங்கே தான் அரவிந்தனை பார்க்கிறீர்கள். காதல்… திருமணம் என்ற வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது.

உங்கள் தேவைகளை ஸ்டெர்லிங் சிவசங்கரன் பார்த்துக் கொள்வதாக முரசொலி மாறன் மூலமாக தந்தைக்கு தகவல் வருகிறது. உங்கள் தந்தையாரும் ஒரு முறை சிங்கப்பூர் சென்று (1998ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தில்) ஒரு வாரம் தங்கி இருந்தார்.

ஆக, இதுவரை உங்களை தந்தை என்ற முறையில் ஒதுக்கி வைத்திருந்தாரா என்பதுதான் முக்கியமான கேள்வி?

அரசியலில், ஏன் சமூகத்தில் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களின் இரண்டாவது மனைவியும் முன்னுக்கு வரமாட்டார். இரண்டாவது மனைவியின் வாரிசும் முன்னே வராது. அதாவது, ஒரு வித தயக்கத்துடன், ஒரு வித எச்சரிக்கை உணர்வுடனே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆனால், அப்படியொரு குறையை கலைஞர் வைக்கவேயில்லை. காலையில் இங்கே பிற்பகலில் அங்கே. மாலையில் இங்கே இரவில் அங்கே என்று உணவு பழக்கத்தையும் உறங்கும் பழக்கத்தையும் கலைஞர் யாருக்காக மாற்றிக் கொண்டார். கனிமொழி என்ற மகள் இருப்பதால் தானே.

செல்வத்தில், குடும்ப அந்தஸ்தில் எந்த குறையும் வைக்காத அளவுக்கு உங்களையும் உங்கள் தாயாரையும் பார்த்துக் கொண்ட, கலைஞரை நீங்கள் எப்படி பார்த்து கொண்டிருக்க வேண்டும். அதுவும் இந்த தள்ளாத வயதில், அவரை தள்ளிக் கொண்டு சென்னைக்கும் டெல்லிக்கும் அலைய வைத்தது எது?

ஒரு சின்ன பிளாஷ் பேக்!

2003ம் ஆண்டு வாக்கில் முரசொலி மாறன் இறந்ததும், யாருக்கு அந்த இடம். யாரை நிறுத்துவது அந்த இடத்தில் ? என்ற விவாதம் சி.ஐ.டி. காலனியில் எழுந்த நேரம். அந்த காலகட்டத்தில் தான் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு குடிபெயருகிறீர்கள்.

முரசொலி மாறன் இடத்தை நிரப்ப வேண்டியவர்கள் யார் என்று விவாதத்தில், ‘அவர்கள் மகன்களில் யாராவது ஒருவர்’ என்று குரல் கொடுத்து, ’அத்தைக்கு நன்றி’ என்று புளங்காகிதம் அடைந்தவர்கள் தான் கலாநிதியும் தயாநிதியும்.

அங்கேயும் உங்களுக்கு அரசியல் ஆசை வரவில்லை என்பதற்காகத்தான் இந்த பழசை ஞாபகப்படுத்துகிறேன். 2004 ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிகிறது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ஆகிறார்.

இங்கே பிளாஷ் பேக் முடிகிறது.

தயாநிதி மாறனுக்கு கிடைக்கும் செல்வாக்கை உங்கள் தாயார் பார்க்கிறார். தனது மகளுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பான இடம் வேண்டும். தனக்குப் பிறகு, தலைவர் கலைஞருக்கு பிறகு, கனிமொழியின் எதிர்காலம்? என்ற கணக்கு போடுகிறார்.

தினந்தோறும், கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வாருங்கள் என்று உங்கள் தாயார் நச்சரிக்க, கலைஞரே எத்தனையோ முறை சீனியர்களிடம் புலம்பினார்.

அரசியல் விதை உங்களுக்கும் ஆரம்பித்தது. ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் ஏதேதோ செய்யத்தொடங்கி, வேலை வாய்ப்பு முகாம் என்ற பெயரில் வலம் வந்து, அரசியலில் குதித்தேவிட்டீர்கள்.

அரசியல் வாழ்க்கை என்று விதையை தூவியவர் உங்கள் தாயாராக இருந்தாலும், உங்களுக்கும் ஆசை அதிகமாகவே இருந்தது.

தனக்குப் பிறகு பாதுகாப்பான இடம் என்று தாயார் சொன்ன இடம், திகார் சிறையா?

இதற்குதானா ஆசைப்பட்டீர்கள் கனிமொழி?

நீங்கள் சிறை சென்ற பிறகு “கூடா நட்பு” என்று கலைஞர் அளித்த பேட்டி மற்றவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ. உங்களுக்கு புரிந்திருக்குமே?

ஆ.ராசா, பூங்கோதை ஆலடி அருணா, ஜாபர் சேட், ஜெகத் கஸ்பர், நீரா ராடியா, சுப்ரியா சுலே, ஆசிப் பல்வா ஆகியோருடன் இருந்த நட்பு கூடா நட்பா? அல்லது கூட வேண்டிய நட்பா என்று யோசிக்கும் வேளை வந்துவிட்டது.

இந்த நட்புகளை தூக்கி எறிவதும் தூக்கிப் பிடிப்பதும் உங்கள் முடிவு. ஆனால், யார் நல்லவர்கள்- யார் கெட்டவர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க ஐந்தரை மாதங்கள் என்ற நீண்ட காலம் கிடைத்திருக்கிறது. தனிமையில் உங்கள் தவறுகளை நீங்களே பட்டியல் போட்டு, அதில் யாரெல்லாம் தொடர்புடன் இருந்தார்கள் என்று நினைத்து நினைத்துப் பார்த்திருப்பீர்களே?

ஆக, நட்பு பாராட்ட வேண்டியவர்கள் யார்? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, அரசியலில் இனியும் இருக்க வேண்டுமா என்பது இரண்டாவது எடுக்க வேண்டிய முடிவு.

இத்தனை தூரம் கடந்துவந்துவிட்டு, அரசியலை துறவரம் செய்துவிட முடியுமா என்று கேட்டால், சிரித்துவிடுவீர்கள்.

அரசியலை துறவரம் செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. புதிய பாதையாக அது இருந்தால், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது?

கலைஞருக்கு 2016ம் ஆண்டு 93 வயது.

அழகிரிக்கு 2016ம் ஆண்டு 67 வயது.

உங்களுக்கு 2016ம் ஆண்டு 47 வயது.

அட 2021ம் ஆண்டு தேர்தலில் கூட 52 வயது தான்.

உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது?

ஸ்தீரி லோலன் என்ற பெயர் எடுத்த அருணகிரிநாதர் தான் திருவாசகத்தையும் தேவாரத்தையும் பாடியவர்.

வழிப்பறி கொள்ளையன் என்று பெயர் எடுத்த வால்மீகி எழுதியது தான் ராமாயணம்.

இதையெல்லாம் குத்திக் காட்டி, உங்கள் கோபத்தை தூண்டுவதாக நினைக்க வேண்டாம்.

தமிழ்நாடு அல்ல இந்திய அரசியலில் சமூகத்துக்காக, பொதுமக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நேரத்தில், ஒரு தகவல் வந்து சேருகிறது.

டெல்லியிலிருந்து வந்து சேரும் முன்பே, ‘எனக்கொரு பதவி’ வேண்டும் என்று நீங்களும் உங்கள் தாயாரும் நெருக்கடி கொடுப்பதாக அத்தகவல் சொல்கிறது.

ஆக, அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை உங்கள் எதிர்கால நடவடிக்கையில்தான், நான் உணர முடியும்?

அதுவரை

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவை கெடுத்தார்”

- என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டி

விடைபெறுகிறேன்.

நன்றி !

Friday, 11 November 2011

முதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.!

வாழிய நலம்!

தமிழகத்தை நீங்கள் மூன்றாவது முறையாக ஆள்கின்றீர்கள்!! வாழ்த்துக்கள்!!!

நான் கடலூர்காரன்....


இப்போதைக்கு சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனை காரணமாக ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. 1982ல் எங்கள் ஊர் கடலூரில் எம்ஜிஆர் தலைமையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலராக உங்களை நியமித்து, உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்தார்...

அன்றைய தின்ம் நீங்கள் ஊர்வலமாக சென்று மாநாடு நடந்த மஞ்சை நகர் மைதானத்தை அடைந்தீர்கள்... எங்கள் ஊர் கூத்தப்பாக்கத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் இருந்துதான் உங்கள் ஊர்வலம் தொடங்கியது...






அப்போதும் சசிக்கலாவுடன்தான் நீங்கள் அந்த பயணத்தை தொடங்கினீர்கள்..நான் சிறுவன் என்பதாலும் அந்த தொண்டர்படை கூட்டம் போன்றவற்றாலும்.எங்கள் ஊருக்கு திடிர் என்று ஒரு ஸ்டார் அஸ்தஸ்த்து கிடைத்து விட்ட காரணத்தாலும், எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி உற்சாகம்... உங்கள் அரசியல் பயணம் அந்த புள்ளியில் இருந்துதான் தொடங்கியது...அந்த இடத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்..அப்போது உற்சாகமாக கையசைத்து நான் உட்பட எங்கள் ஊரே உங்களை வழி அனுப்பி வைத்தது...


அதே மாநாட்டுக்கு என் ஆயா அழைத்து கொண்டு போனதால் நான் அதில் கலந்து கொண்டேன்..கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம் எல்லாம் ஆடினார்கள்..நீங்களும் முதல்நாள் நிகழ்ச்சியில் ஆடினீர்கள் என்று நினைக்கின்றேன்..


அதன் பிறகு நீங்கள் பல எற்ற இறக்கங்களையும் நம்பிக்கை துரோகங்களையும் சந்தித்து முதல்வராக வெற்றிவாகை சூடினீர்கள்..

இதோ மூன்றாவது முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள்..

உங்களை பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்... நீங்கள் முதலைமைச்சராக இருந்த போது இதே சென்னையில் உங்களால் ஏற்படுத்தப்பட்ட டிராபிக்கில் மூச்சு திணறிய லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்..

பதவி ஏற்றதும் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு வாரத்துக்கு ஒரு நாள் உங்களிடம் உரையயாடுகின்றேன் என்று சொன்ன போது.. நெகிழ்ந்து போய் நீங்கள் மாறிவிட்டதாக சொன்னார்கள்..ஆனால் நீங்கள் மாற வாய்ப்பே இல்லை என்பதை நிரூபித்து விருகின்றீர்கள்.



நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும், தைரியமான முடிவுகள் என்று பலர் சொல்லக்கேட்டு இருக்கின்றேன்.. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை..


அப்படி உண்மையில் உங்களுக்கு பெரிய கட்ஸ் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம் கடைசி வரை சமச்சீர் கல்வியை அமுல்படுத்தாமல் இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளலாம்...


ஆட்சியும் ,அதிகாரமும் ஆமாம் சாமி அமைச்சர்களும் இருக்கும் போது எந்த முடிவையும் நீங்கள் தடலடியாகவே எடுக்கலாம்..ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் நீங்கள்.. இதை தைரியமான முடிவு என்று சொன்னால் நகைப்பாக இருக்கின்றது..அதிகாரம் என் கையில் இருந்தாலோ அல்லது சுப்பன் குப்பன் யார் கையில் அதிகாரம் இருந்து இருந்தாலோ..மனசாட்சியை கொஞ்சம் இழந்து இருந்தால் போதும், அப்படி ஒரு முடிவுகளை திடும் என்று யார் வேண்டுமானலும் எடுக்கலாம்..


ஆனால் அதே அரசு ஊழியர்கள் வாரிக்கொடுத்த கலைஞரை இந்த தேர்தலில் தூக்கி தூர எரிந்தார்கள்..காரணம் கலைஞரின் வயதை மனதில் வைத்து திமுகவின், வட்டம் மாவட்டம் என்று பலர் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டார்கள்.. வாரிசு அரசியல், எல்லாம் பொதுமக்களின் எரிச்சலை ஏற்ப்படுத்த, அரசு ஊழியர்கள் உட்பட அதை மனதில் வைத்து, உங்களுக்கு வாக்கு அளித்து வெற்றிபெறச்செய்தார்கள்..


உங்களை வெற்றிபெறச்செய்தது நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கைதான் ஆனால் நீங்கள் செய்து கொண்டு இருப்பது மக்கள் முகம்சுளிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றது..






மூன்றாவது முறையாக தமிழகத்தை நீங்கள் ஆளும் ஆட்சியில் உங்கள் மீதான விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல...

ஆனால் மூன்றாவவது முறையாக பதவி ஏற்றதில் இருந்து நீங்கள் பொது மக்களின் வருத்தங்களை அதிகம் சம்பாதித்து கொள்ளுகின்றீர்கள்..


ஹரி ஓம் என்று சம்ச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாதகாலம் பிள்ளைகளை முடக்கினீர்கள்...திரும்ப திரும்ப உச்சநீதிமன்றம் விடாமல் சென்றீர்கள்..உச்சநீதி மன்றத்தின் கதவை அதிகம் முறை தட்டியது உங்கள் ஆட்சியில்தான் என்று நினைக்கின்றேன்...ஆனால் உச்சநீதிமன்றம் உங்களுக்கு குட்டு வைத்தபின்தான் நீதிக்கு தலைவணங்குவதாக சொன்னீர்கள்...ஆனால் இன்னும் சரியான படி சமச்சீர்கல்வி பிள்ளைகளுக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்பதே உண்மை..


அடுத்ததாக வரி உயர்வு 12 பர்சென்ட் வாட் வரி விதிப்பை 14 சதவீதமாக மாற்றி உத்தரவிட்டீர்கள்.. இதில் கொடுமை 4 பர்சென்ட் வரி விதிப்பில் இருந்த பொருட்களை எல்லாம் 14 பர்சென்ட்க்கு உயர்த்தினீர்கள்..

புது தலைமைசெயலகம் வேண்டும் இடம் போறவில்லை என்று முதல் முதலாக கோரிக்கை எழுப்பியது நீங்கள்தான்.. ஆனால் என்னவென்றே தெரியவில்லை இருக்கும் கட்டிடத்தை இடித்து நாஸ்த்தி பண்ணுவதில் அப்படி உங்களுக்கு என்ன சந்தோஷமோ? ..அல்லது உங்களுக்கு ஐடியா கொடுக்கும் அல்லக்கைகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது..



நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் போய்ஸ் தோட்டத்து வீட்டில் வேறு ஒருவர் குடி புக அனுமதிப்பீர்களா? அது போலத்தான் ராணிமேரி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். நீங்கள் பின் வாங்கினீர்கள்.. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்...???





இந்த முறை ஆட்சிக்கு வந்தஉடன் வழக்கம் போல உங்கள் காழ்புணர்ச்சி அரசியலை கையில் எடுத்துக்கொண்டீர்கள்..




1200 கோடி செலவில் கட்டப்பட்ட புது தலைமைசெயலகத்தை மருத்தவமைனையாக மாற்ற போகின்றேன் என்று ஆணை பிரப்பித்தீர்கள்..அந்த கட்டிடத்தின் மேல் உங்களுக்கு காழ்புணர்ச்சி வரக்காரணம் ..சிம்பிள் கலைஞர் கட்டியது என்பது மட்டுமே காரணம்.. இதில் ஒரு விஷயம் நீங்க கவனிக்க வேண்டும்.. அவர் கட்டிய பாலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை..

கலைஞர் திறந்து வைத்த பாலங்கள் சென்னை முழுவதும் நிறையவே இருக்கின்றன..ஏன் இப்போது ஆட்சிக்கு வந்ததும் நிறைய பாலங்கள் நீங்கள் திறந்து வைத்தீர்கள்.கோயம் பேடு பேருந்து நிலையத்தை திறந்து விட்டு நான் திறந்தேன் என்ற பெரிய போர்டு வைத்துக்கொண்டீர்களே அது போலத்தான்...ஆனால் கோயம் பேடு பேருந்து நிலையம் யாரால் உருவாக்கப்ட்டது என்று எல்லோருக்கும் தெரியும்...அது உங்களுக்கு தெரியும்... முடிந்தால் அதையும் மாற்றுங்கள்..





இப்போது 180 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவின் பெரிய நூலகம் மருத்துமனையாக மாற்றப்போவதாக அறிவித்து இருக்கின்றீர்கள்..


உங்கள் வீட்டை நீங்கள் வாழ யோசித்து யோசித்து கட்டி இருப்பீர்கள்..திடிர் என்று அதில் சர்வதேச தரத்தில் ஓட்டல் அமைக்க முடியுமா?? கிச்சனில் எப்படி பெட்ரூம் அமைக்க முடியாதோ அது போலத்தான் தலைமைசெயலகம், மற்றும் அண்ணா நூற்றாண்டு நுலகத்தை மருத்துவமணையாக மாற்ற முடியாது...


நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும் முதல்வர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் இதனை கண்டிப்பாக வலுக்கட்டாயமாக மாற்றலாம்.. ஆனால் அந்த நிறைவு வராது என்பதே உண்மை...பல கோடி மக்கள் வரிப்பணம் விரயம் செய்து நீங்கள் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும்...வாழ்த்துகள்.. இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது...




குழப்பில் உப்பு அதிகம் போய்விட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடும் கதை போல பேசுகின்றீர்கள்..

மீறி திமிரி தாரளமாக வீம்புக்கு செய்யலாம்... அதை ஆதரிக்க சில அல்லக்கைக்ள் இருக்கின்றார்கள்..

வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களின் துதி பாடிகள் வேண்டுமானால் நடுநிலை போர்வையில் புதிய தலைமைசெயலக கட்டிடத்தை எண்ணெய் சட்டி கட்டிடம் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம்.. எங்களுக்கு அது பெரிய விஷயம்..


சென்னையில் தலைநகரில் நீங்கள் இருந்து கொண்டு பல கோடி செலவு செய்த எந்த கட்டிடத்தையும் நேரில் போய் பார்க்காமல், அதில் எந்த அளவுக்கு உள்கட்டுமானபணி நடந்து இருக்கின்றது.. என்று அறிந்துக்கொள்ளாமல் திடும் என்று மாற்றுவது சாத்தியமா? என்று நீங்கள் நேரில் ஒரு முறை பார்த்து விட்டு இதை மாற்றித்தான் ஆக வேண்டும் என்று சொன்னாலும் அதில் ஒரு நியாயம் இருக்கின்றது...

ஆனால் கலைஞர் கட்டினார் அது மட்டும்தான் உங்கள் கண்களை உறுத்துகின்றது அல்லவா??


இப்போதும் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை.. நேரில் போய் பாருங்கள் தலைமைசெயலகத்தை, நூற்றண்டு விழா நூலகத்தையும்...கலைஞர் எந்த கட்டடி வாசலிலும் காவல் காத்துக்கொண்டு இருக்க போவதில்லை...





உங்கள் ஈகோவுக்கு மக்களின் வரிப்பணத்தை காலி செய்ய போகின்றீர்கள்..மக்களின் வரிப்பணத்தை காலி செய்ய அவ்வளவு பேராசையா?

ஸ்பெக்ட்ரமில் அரசுக்கு வருமான இழப்பு என்றுதான் ராஜாவும் கனிமொழியும் சிறையில் இருக்கின்றார்கள்..

நீங்களும் அதைத்தான் செய்கின்றீர்கள்..

200கோடிக்கு வீம்புக்கு சமச்சீர்கல்வியை எதிர்க்க பழைய புத்தகங்களை அச்சடித்தீர்கள்..


1200கோடி தலைமைசெயலகத்தை வீணாக்கி இருக்கினறீர்கள்..

180 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நுற்றாண்டு நூலகம்..

உங்கள் ஈகோவுக்காக எல்லாம் வீணாக்கபடுகின்றது..

இதை மாற்ற ஆகும் செலவு எத்தனை கோடி?? அதில் இருக்கும் பொருட்கள் விரயம் என்று கணக்கு போட்டால் தலை சுற்றுகின்றது...


நீங்கள் ஆட்சின்னு வந்து ஒரு வருடம் கூட ஆகிவில்லை...1500 கோடி ருபாய் வரிப்பணம் பாழ் செய்யது இருக்கின்றீர்கள்.

கட்டங்களை மாற்றுக்கின்றேன் இடிக்கவில்லை என்று நீங்கள் சொல்லலாம்..நீங்கள் அதையும் செய்வீர்கள்..அதனால்தான் இப்போதே சொல்லுகின்றோம்...


நம் நாடு செல்வம் கொழிக்கும் நாடு அல்ல...மக்களும் அப்படித்தான்...

முதல்வர் அவர்களே...பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் வெங்காயம் கடித்து பழைய சோற்றை நீங்கள் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை பார்ன் இன் சில்வர் ஸ்பூன் நீங்கள்..ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல இன்னும் பல குடும்பங்கள் அப்படித்தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி பட்ட ஊரில் 1500கோடி பணத்தை விரியமாக்குவது எந்த வகையில் நியாயம்.??

கோடி கோடியாக கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்றால் நிருப்பித்து உள்ளே தள்ளுங்கள்..ஒரு கையெழுத்தில் ஒரு கட்டிடத்தையே மாற்றும் அதிகார சக்தி இருக்கும் உங்களுக்கு கலைஞர் அவர் ஆட்சியில் தவறு செய்து இருந்தால் இந்நேரம் அவர் மீது வழக்கு பதிந்து இருக்கலாமே...??? ஒரு வேளை சட்டியில் எதுவும் இல்லையோ???





கலைஞர் கருணாநிதி மேல் வன்மம் என்றால் அவர் கடந்த ஆட்சியில் அடித்த தில்லுமுல்லுகளை வெளியே எடுத்து வாருங்கள் வழக்கு பதியுங்கள்... அதை விட்டு விட்டு பல பேர் இரவு பகல் பாராமல் அரும்பாடு பட்டு மக்கள் வரிப்பணத்தில் கட்டிய அரசு கட்டடிடங்களை அதிகாரம் இருப்பதால் ஒரு கையெழுத்தில் மாற்றலாம் என்று நினைக்கின்றீர்கள்..


போன ஆட்சியில் நிறைய நல்லதிட்டங்கள் செய்தார்கள்.. மக்கள் வெறுப்பினை அமோகமாக சாகுபடி செய்தார்கள்.. வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்..அதனால்தான் சென்னை திமுகவின் கோட்டையாக இத்தனைநாளா இருந்தும், இந்த முறை பல நகராட்சிகளை அதிமுக கைபற்ற காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்..

ஆனால் நல்ல பெயரை தக்க வைத்துக்கொள்ளாமல் நீங்களும் அதே தவறைத்தான் செய்கீன்றீர்கள்..


ஒரு அரசு ஊழியன் 60 வருடம் அவன் வகித்த பதவியில் நிலைத்து இருக்கலாம்..நீங்கள் 5 வருடம்தான்..அதை ஒரு முறை திரும்பவும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..


நீங்கள் மிகபெரிய வல்லரசு நாட்டின் பிரதமரோ அல்லது அதிபரோ அல்ல.. இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வர்...அவ்வளவே..


மனிதனாக பார்த்தால் பிளாக் ஹோல்,மிகப்பெரிய அண்டவெளி,அதில் இருக்கும் துகளான சூரிய குடும்பம்,அந்த சூரிய குடும்ப துகளில் நாம் வாழும் பூமி, அந்த பூமியில் மூன்று பங்கு நீர், ஒரு பகுதி நிலப்பரப்பில்,இந்தியாவில்,தமிழ்நாட்டில், சென்னையில் இருக்கும் மிகச்சிறிய மைக்ரோ துகள்தான் நீங்களும் நானும் என்பதை மட்டும் மறந்து வீடாதீர்கள்..


ஆனால் இவ்வளவு சொன்னாலும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு விஷயத்தில் உங்களுக்கு காலம் எல்லாம் நன்றி சொல்ல நான் கடமைபட்டு இருக்கின்றேன்..இந்த விஷயத்தில் யார் எது சொன்னாலும் நான் உங்களை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்...அது சென்னையின் தாகத்தை போக்கியவர் நீங்கள்..

மழை நீர் சேகரிப்பின் மூலம் மெட்ரோ வாட்டர் லாரிகளின் இரைச்சல் சத்தத்தை சென்னையில் ஒடுக்கியவர் நீங்கள்தான்..இன்று தண்ணீர் பிரச்சனையில் சென்னை ஒரளவு தன்னிறவு அடைய உங்கள் அந்த அரசானை வாழ்நாள் முழுவதும் உங்கள் பேர் சொல்லும்...விராணம் திட்டம் சாத்தியமே இல்லை என்று உதடுபிதுக்கினார்கள். ஆனால் நீங்கள் வசப்படுதினீர்கள்..திறமை இல்லாதவர் அல்ல நீங்கள்.. உங்கள் திறமை ஈகோவினால் வீணடிக்கபடுகின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மை...


இது போல மக்கள் பணிகளில் உங்கள் திறமையை நிறுபித்துகாட்டுங்கள்..தமிழகசாலையில் நீர் தேங்காத உலகத்தர சாலைகள் அமைப்பேன் என்று சூளுரையுங்கள்..

ஊழல் இல்லாத அரசு நிர்வாத்தை நடத்தி காட்டுவேன் என்று சவால் விடுங்கள் .. அதைவிட்டு விட்டு பலர் வியர்வை சிந்தி இரவு பகலாய் உழைத்து உருவாக்கியதை உதாசினப்படுத்தி உருகுலைக்காதீர்கள்.. காரணம் ஒவ்வோரு கட்டிடத்திலும் உழைத்தவனின் வலிகள் இருக்கின்றது என்பதையும் உயிர்தியாகங்கள் இருப்பதையும் மறந்து வீடாதீர்கள்..


சென்னையில் அண்ணா சாலையில் அந்த பக்கம் போகும் போது எல்லாம் பொலிவிழந்து இருட்டில் 1200கோடியில் உருவாக்கப்பட்ட தலைமைசெயலகம் இருளில் மூழ்கி இருப்பதை நேரில் பார்க்கும் போது எல்லாம் நெஞ்சம் விம்முகின்றது..



கலைஞர் பெயரை இது போன்ற கட்டிடங்களை மாற்றி விடுவதால் அழித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.



இல்லை நான் கலைஞர் பெயரை வராலாற்றில் இருந்து அழித்து விட்டுதான் மறுவேலை என்று நீங்கள் விரும்பினால்...

கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையை அப்புறப்படுத்தி விடுங்கள்..காரணம் கலைஞரின் சித்தப்பாதானே திருவள்ளுவர்...சமச்சீர் கல்வி புத்தகத்தில் அய்யன் வள்ளுவரின் புகைபடத்தை சலப்பன் டேப்பு போட்டு ஓட்டச்சொன்னவர்தானே நீங்கள்..இதை தமிழ்நாட்டில் மட்டுமே மிக தைரியமாக செய்ய முடியும்...நீங்கள் பிறந்து வளர்ந்த கர்நாடகாவில் திருவள்ளுவருக்கு இணையான கவிஞர் சர்வஞர் மீது இப்படி எல்லாம் லேபிள் ஒட்டமுடியாது....கர்நாடகம் ஸ்தம்பித்து போகும்...


குமரியில் வள்ளுவர் சிலை இருக்கும் வரை கொள்ளை அடித்தரோ? குடும்ப அரசியல் செய்தாரோ?? அந்த சிலை இருக்கும் வரை கலைஞர் புகழ் காலமெல்லம் நிலைத்து நிற்கும்.. அதுக்கு என்ன செய்ய போகின்றீர்கள்..??


செய்தால் எதையும் சுத்தமாக செய்யுங்கள்.. பாரபடசம் கட்டிடங்களுக்கு மட்டும் வேண்டாம்..சென்னை பாலங்கள், வள்ளுவர் கோட்டம், என்று நிறைய கலைஞர் பெயர் சொல்ல நிறைய இருக்கின்றது...இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றது.. உங்களை அசைக்க ஆளே இல்லை...


இதுவரை உங்கள் பெயர் சொல்லுவது போல ஏதாவது கட்டிட்ங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றதா? என்றால் எதுவும் எனக்கு தெரிந்து இல்லை...நான் சொல்லுவது பிரமாண்டமான கட்டிடங்கள், பாலங்கள்....இல்லை...நேரு விளையாட்டு அரங்கம்.. அதுகூட மத்திய அரசின் நிதியால் தெற்காசிய விளையாட்டு போட்டி நடக்கும் போது கொடுக்கபட்டு கட்டப்பட்டது....இடத்தை மட்டும் ஒதுக்கி கொடுத்தீர்கள்.. மாநில அரசு பணத்தில் உதாரணத்துக்கு புதியதலைமைசெயலகம்..,கிண்டி,கோயம்பேடு,பாடி போன்ற பெரிய மேம்பாலங்கள்.. மெட்ரோ ரயில்,தலைமைசெயலகம்,வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு மேம்பாலம் என்று குறிப்பிட்டு சொல்லுங்கள்.. சரி.. நேரு விளையாட்டு மைதானத்தை இரண்டு வருடத்தில் கட்டி முடித்தீர்களாமே?200 கோடி செலவில் சென்னை அரசு பொது மருத்தவமணை கட்டினீர்கள்..அதே போல 10 வருடத்தில் வேறு எதாவது பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டி இருக்கின்றீர்களா??

மேலே இருக்கும் படங்கள் புதியதலைமைசெயலவம் எப்படி உங்களால் இரவில் உதாசனபடுத்தபட்டு இருப்பதை தெரிவிக்கவே நான் புகைபடங்கள் எடுத்தேன்..பல பேர் இரவு பகலாக உழைத்து உருவாக்கிய கட்டிடத்தையும் பெரிய வளாகத்தையும் மனசாட்சி இருப்பவர் யாரும் இப்படி செய்யவே மாட்டார்கள்.. சாரி நான் உங்களிடம் மனசாட்சி பற்றி பேசிவிட்டேன்.. மன்னிக்கவும்...



எங்கள் ஊர் கூத்தப்பாக்கத்தில் உங்கள் அரசியல் பயண ஊர்வலம் தொடங்கிய போது உங்கள் வாகனத்தை கை அசைத்துக்கொண்டு துரத்திய படி ஓடி வந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்...நீங்கள் சர்ச் பார்க்கில் மெத்த படித்தவர்..நான் அப்படி அல்ல.. எனக்கு தெரிந்து இருப்பதை எழுதி இருக்கின்றேன்..



சடுதியில் மாறும் வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை இதில் எதுக்கு இவ்வளவு ஈகோ உங்களுக்கு என்று தெரியவில்லை...?? நான் நான் என்று நீங்கள் பேசுவதை தமிழகம் அறியும்...


கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன்.... எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டு...ஆனால் நீங்கள் வணங்கும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார் என்பதை மட்டும் மறவாதீர்கள்.



உங்கள் அமைச்சரவை சகா மரியம் பிச்சை,நீங்கள் நடத்திய எம்எல்ஏ பதவி ஏற்ப்பு விழாவில் கலந்து கொள்ள, திருச்சியில் இருந்து காலையில் சென்னைக்கு கார் எறும் போது, தான் இன்னும் ஐந்து வருடத்துக்கு அமைச்சர் என்று நினைவில்தான் பயணப்பட்டு இருப்பார். ஒரு நொடியில் அவர் வாழ்க்கை மாறிப்போனதை நீங்கள் அறியாதவர் அல்ல...



பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்...

Tuesday, 19 April 2011

தோல்விக்கு பின்-கலைஞரின் கண்ணீர் கடிதம்!

கொடி தோரணம் இல்லை. ஆரவாரம், பேரணி இல்லை. பொது கூட்டம், கல்வீச்சு, அடிதடி எதுவுமே இல்லை தமிழக தெருக்களின் வீட்டு சுவர்கள் சுத்தமாக இருக்கிறது. எருமை மாடு உரசுவதற்கும், பசுமாடு திண்பதற்கும் போஸ்டர்கள் கிடையாது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தேர்தல் முடிந்து விட்டதாம். நடந்ததும்  தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஒரு நீர்குமிழி விரிந்துபட்டென்றுவெடிப்பதுபோல்எல்லாமேஒய்ந்துவிட்டது.
 பழையகால தேர்தல் என்றால் எத்தனை ஊர்வலங்களை பார்க்கலாம். உங்கள் வீட்டு பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார், ஏழைகளின்  சின்னம் என்றெல்லாம் எத்தனை ஒலிபெருக்கிகள் அலறி காதை கிழிக்கும். தெருவிளக்கில் மின்சாரம் திருடி கட் அவுட்டுகளை அலங்கரிப்பதாகட்டும், திண்ணை தூங்கிகளுக்கு சாராயம் வாங்கி கொடுத்து அலற வைப்பதாகட்டும், ‘டீ’ கடை பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அரசியல் கச்சேரி நடத்துவதாகட்டும், வீடு வீடாக தேடி வந்து காலில் விழுகிறேன் பேர்வழி என முரட்டு கையால் பாதங்களை சுரண்டுவதாகட்டும,; அதில் ஒரு அலாதியான போதை இருக்கத்தான் செய்தது, ஒரு மக்கள் அரசு என்பது மக்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச சந்தோசம் இது மட்டும் தான் என்றிருந்த நிலைமாறி அதுவும் இல்லாமல் போய்விட்டது.

     அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் மக்கள் சந்தோஷத்தை தின்று ஏப்பம் விட்டு விட்டதென்றால் நாமும் அப்படி செய்ய முடியுமா? தேர்தலை முடித்தோம்  ஓட்டுகளை எண்ணி பட்டாசு வெடித்து கொண்டாடியோ தலையில் துண்டு போட்டு ஒப்பாரி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம் என்றோ கூட போக முடியவில்லை. ஒரு நாள் கூத்தின் விடையை பார்க்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமாம். அது வரையிலும் தேர்தலில் நின்றவர்கள் குளிர் ஜுரத்தில் கிடந்து துடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது திருவாளர் பொதுஜனம் யார் ஜெயிப்பர்? யார் ஆட்சி அமைப்பார்? எந்த கூட்டணி யார் பக்கம் அணி மாறும்? என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சி படபடக்க காத்திருப்பது தான் மகா பரிதாபம். எனவே நமது திருவாளர் பொதுஜனத்தின் ஆவலுக்கு தீனி போட தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் யார் தோற்றால் என்ன பேசுவார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பார்ப்போம்.
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தோல்வி என்பது புதிய விஷயமல்ல அவர் பல முறை தோற்று இருக்கிறார் எனவே இந்த முறை தோற்று விட்டால் கழக உடன் பிறப்புகளுக்கு எப்படி கடிதம் எழுதுவார்? அவரின் துள்ளிவரும் தமிழ் நமக்கு வராது என்றாலும் முயற்சி செய்து தான் பார்ப்போமே!

உடன் பிறப்பே!
வான்புகழ் கொண்ட வள்ளுவனையும செம்மொழியில் சிலப்பதிகாரம் சமைத்த இளங்கோவையும் தந்த தாய் தமிழ்நாடு இன்று கண்டிருக்கும் அலங்கோலத்தை பார்த்தாயா? உடல் எங்கும் பாய்ந்தோடி கொண்டிருக்கும் பச்சை ரத்தம் நெஞ்சத்தை மட்டும் கிழித்து குபுகுபுவென பாய்வது போல, நீ துடித்திருப்பாய் அன்னை தமிழ்நாடு அமாவாசை இருளில் முழ்க போகிறதே என்று கலங்கி கண்ணீர் வடித்திருப்பாய்.

     தம்பி உன் மூத்த சகோதரனான நான் இளமை பிராயத்தை கடந்து முதுமையை தொட்டுவிட்டாலும், பாழ்பட்டு கிடக்கும் தாய் தமிழகத்தை வாழ வைத்து பார்க்கும் வற்றாத ஆசையில் சுற்றாத இடமில்லை. சூழன்று அடிக்கும் சூறாவளி போல என் தாய் நிலமெல்லாம் தம்பி உன் மலர்ந்த முகத்தை காண ஓடோடி வந்தேன். பல தாய் வயிற்றில் நாம் பிறந்தாலும் ஒரு தாய் மக்களென உன்னை நானும், என்னை நீயும் கண்ணார கண்டு நெஞ்சார தழுவி கொண்டோம். அந்த தழுவிலுள்ள பாசம் பணத்தால் வந்ததல்ல தமிழன் என்று இனத்தால் வந்தது என்று யாருக்கு தெரியும்?


இந்த அண்ணனும் தம்பியும் சேர்ந்து விட்டால் அடிமையாக கிடக்கும் தமிழன் அடலேறு என சீறி எழுந்து விடுவான். தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆரிய மாயையின் நெஞ்சை பிளந்து விடுவான் என அஞ்சி நடுங்கிய தர்ப்பைபுல் கூட்டத்தார் சதி பேசினார்கள் தங்களுக்குள் உடைந்து கிடந்த பிணக்குகளை தற்காலிகமாக சமன் செய்து வானை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நாம் பள்ளத்தில் வீழ்வதற்கு குழி வெட்டினார்கள்.

     கிரேக்க வீதிகளில் சுற்றி திரிந்த ஒரு கிழவன் வருவோர் போவோரை எல்லாம் வாயார வரவேற்று உன்னையே நீ அறிவாய் என தத்துவம் பேசினானாம் அதே போல உடன்பிறப்பே உன்னையும் நீ அறிவாய், என்னையும் நீ மட்டுமே அறிவாய். கூழுக்கும், ஆடைக்கும் பாடிய பழந்தமிழ் புலவன் போல தமிழர் நலத்தை மட்டுமே...!