பதிவுகள்

Saturday 29 December 2012

சொல்ல வேண்​டிய நேரம்

புது​தில்​லி​யில் பாலி​யல் கொடு​மைக்கு எதி​ரான போராட்​டத்​தால் மத்​திய அரசு அறி​வித்த,​​ உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதி​பதி ஜே.எஸ்.​ வர்மா தலை​மை​யி​லான மூவர் குழு தனது பணியை உடனே தொடங்​கி​விட்​டது.​ ​
​ பெண்​க​ளின் மீதான பாலி​யல் குற்​றங்​க​ளைத் தடுப்​பது குறித்​தும்,​​ இதற்​கான தண்​ட​னை​கள்,​​ வழக்கு நடை​மு​றை​கள் குறித்தும் பொது​மக்​கள் தங்​கள் ஆலோ​ச​னை​களை இணை​ய​த​ளத்​தின் மூல​மா​க​வும் ​(த்ன்ள்ற்ண்​ஸ்ரீங்.ஸ்ங்ழ்ம்​ஹ​ஃய்ண்ஸ்ரீ.ண்ய்)​ தொலை​ந​கல் மூல​மா​க​வும் ​(011-23092675) தெரி​விக்​க​லாம் என்று இக்​குழு அழைப்பு விடுத்​துள்​ளது.​ ​
​ இத்​தனை நாள்​க​ளாக சமூ​க​வ​லைத்​த​ளங்​க​ளில் கருத்து தெரி​வித்​தும்,​​ போராட்​டங்​க​ளுக்கு அழைப்பு விடுத்​தும் எதிர்ப்​புத் தெரி​வித்​துக்​கொண்​டி​ருந்த அனை​வ​ரும் இனி தங்​கள் கோரிக்​கைக்கு தாங்​களே வலு சேர்க்க வேண்​டிய பொறுப்​பும் கட​மை​யும் இப்​போது ஏற்​பட்​டுள்​ளது.​ அவ​ர​வர் தங்​கள் ஆலோ​ச​னை​கள் வழங்​க​வேண்​டிய நேரம் வந்​துள்​ளது.​
​ டிசம்​பர் 16-ஆம் தேதி துணை​ம​ருத்​துவ மாண​விக்கு ஏற்​பட்ட துய​ரச் சம்​ப​வத்​தில் ​ அனைத்து நட​வ​டிக்​கை​க​ளும் வெகு​வி​ரை​வாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​ இரண்டு காவல் துணை ஆணை​யர்​க​ளின் பணி​யிடை நீக்​கம்;​ குற்​ற​வா​ளி​கள் 6 பேர் மறு​நாளே கைது;​ விரை​வு​நீ​தி​மன்​றம் ஜன​வரி 3-ஆம் தேதி​மு​தல் நாள்​தோ​றும் விசா​ரணை நடத்​தும் என்ற அறி​விப்பு;​ தில்​லி​யில் பெண்​க​ளின் அவ​சர உத​விக்கு தொலை​பேசி எண் 181 என பல்​வேறு நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் தில்லி மக்​கள் தங்​கள் போராட்​டத்தை நிறுத்​திக்​கொள்​வதே சரி​யா​ன​தாக இருக்​கும்.​ இப்​போது இந்த கோபம் முழு​வ​தும்,​​ புதிய நடை​முறை,​​ புதிய சட்​டம் உரு​வாக்​கு​வ​தற்​கா​கத் திருப்​பி​வி​டப்​பட வேண்​டும்.​
​ மத்​திய அர​சின் பெண்​கள் மற்​றும் சிறார் மேம்​பாட்டு அமைச்​ச​கத்​தின் புள்​ளி​வி​வ​ரப்​படி,​​ 2011-ஆம் ஆண்டு இறு​தி​யில் வல்​லு​றவு வழக்​கு​க​ளின் எண்​ணிக்கை 95,065.​ இதில் 79,476 வழக்​கு​க​ளின் விசா​ரணை நிலு​வை​யில் உள்​ளது.​ பாலி​யல் அத்​து​மீ​றல் ​(ஙர்ப்ங்ள்ற்​ஹற்ண்ர்ய்)​ வழக்​கு​கள் 1,92,160.​ இதில் விசா​ரணை நிலு​வை​யில் இருப்​பவை 1,62,777.​
​ பெண்​கள் மீதான பாலி​யல் அத்​து​மீ​றல்,​​ பாலி​யல் அணுக்​கம்,​​ பாலி​யல் வன்​முறை,​​ பாலி​யல் மிரட்​டல்,​​ வல்​லு​றவு போன்ற வழக்​கு​கள் விரைந்து முடிக்​கப்​ப​டா​மல்,​​ பல ஆண்​டு​கள் தள்​ளிப்​போ​டப்​ப​டு​வ​தற்​குக் கார​ணம்,​​ நீதித்​துறை மட்​டுமே அல்ல.​ வழக்​கு​ரை​ஞர்​க​ளும் கார​ணம்.​ ஆகவே இத்​த​கைய வழக்​கு​க​ளில் தொடர்ச்​சி​யாக விசா​ரணை நடத்தி,​​ உட​ன​டி​யா​கத் தீர்ப்பு வழங்​கு​வது மட்​டுமே பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு நியா​யம் கிடைக்க வழி​செய்​யும்.​ விரைவு நீதி​மன்​றம் அமைப்​பது மட்​டு​மின்றி,​​ இந்த வழக்​கு​க​ளில் வாய்தா வழங்​கக்​கூ​டாது என்​கின்ற நீதித்​துறை நடை​முறை மிக இன்​றி​ய​மை​யா​தது.​
​ மேலும்,​​ இத்​த​கைய வழக்​கு​க​ளில்,​​ பெண்​கள் வெளிப்​ப​டை​யாக பேச​மு​டி​யா​மல் கூசிட வைக்​கும் நீதி​மன்ற நடை​மு​றை​க​ளி​லும் மாற்​றம் தேவை.​ பாலி​யல் கொடு​மைக்கு இலக்​கான ஒரு பெண்,​​ தனது வாக்​கு​மூ​லத்தை ஒரு பெண் நீதி​ப​தி​யி​டம் மட்​டுமே சொல்​வேன்,​​ தன்​னி​டம் கேள்​வி​கேட்​கும் எதிர்த் தரப்பு வழக்​கு​ரை​ஞர் ஒரு பெண்​ணாக இருக்க வேண்​டும் என்று வலி​யு​றுத்த முடி​யாத நிலை​யில் பாதிக்​கப்​பட்ட பெண் பல​வற்றை வெளிப்​ப​டை​யா​கச் சொல்ல முடி​யா​மல் தவிக்​கி​றார்.​ ​ ஒரு பெண் தனக்கு இழைக்​கப்​பட்ட பாலி​யல் கொடு​மையை கூச்​ச​மின்​றி​யும்,​​ வார்த்​தை​களை முழுங்​கா​ம​லும் சொல்​வ​தற்கு பெண்​நீ​தி​பதி அல்​லது காவல்​துறை பெண் அதி​கா​ரி​யி​டம் மட்​டுமே இய​லும்.​ எதிர்த்​த​ரப்பு வழக்​கு​ரை​ஞர் பெண்​ணாக இருந்​தால்​தான்,​​ ஒரு ஆண் வழக்​கு​ரை​ஞர் கேட்​கக்​கூ​டிய வக்​கி​ரம் பொதிந்த கேள்​வி​களை அந்​தப் பெண்​வ​ழக்​கு​ரை​ஞர் கேட்​டா​லும்​கூட,​​ அதற்கு பாதிக்​கப்​பட்ட பெண் துணிச்​ச​லு​டன் பதில் அளிக்க ​ சாத​க​மாக இருக்​கும்.​ பாலி​யல் கொடுமை தொடர்​பான வழக்​கு​க​ளில் தன்னை விசா​ரிக்​கும் காவல்​துறை அதி​காரி,​​ வழக்​கு​ரை​ஞர்,​​ நீதி​பதி அனை​வ​ரும் பெண்​க​ளா​கத்​தான் இருக்க வேண்​டும் என்​பது அந்த பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் உரி​மை​யாக மாற்​றப்​பட வேண்​டும்.​
​ அடுத்​த​தாக,​​ இத்​த​கைய வழக்​கு​க​ளில் அதி​க​பட்​ச​மான தண்​ட​னை​யாக மரண தண்​டனை விதிக்​கப்​பட வேண்​டும் என்று கோரிக்கை வைக்​கப்​ப​டு​கி​றது.​ இந்த ஆலோ​ச​னையை இந்​தக் குழு​வி​டம் பொது​மக்​கள் தெரி​விக்​க​லாம்.​ இத்​த​கைய வழக்​கு​க​ளில் தண்​ட​னையை கடு​மை​யாக்க வேண்​டும் என்​ப​தில் சந்​தே​கம் இல்லை.​ ஆனால்,​​ மரண தண்​டனை கூடாது என்​றும்,​​ தீவி​ர​வாத வழக்​கில் மரண தண்​டனை பெற்ற அப்​சல் குரு உள்​ளிட்ட அனை​வ​ரை​யும் மன்​னித்து,​​ தண்​ட​னைக் குறைப்பு செய்ய வேண்​டும் என்​றும் கருத்​து​ரு​வாக்​கம் நடை​பெற்​றுக்​கொண்​டி​ருக்​கும் சூழ​லில்,​​ பாலி​யல் கொடு​மைக்கு மர​ண​தண்​ட​னையை நீதி​ப​தி​கள் பரிந்​து​ரைப்​பார்​கள் என்​பது சந்​தே​கமே!​
​ புது​தில்​லி​யில்,​​ நன்கு படித்த,​​ நாக​ரீக இளம்​பெண்​கள் தாங்​கிய பதா​கை​க​ளில் காணப்​பட்ட வாச​கங்​கள் பல​வும் மேலை நாடு​க​ளில் இதே​போன்ற எதிர்ப்​பு​க​ளின்​போது எழு​தப்​பட்​ட​வற்​றின் மறு​பி​ர​தியே.​ ஆனால் தமிழ்​நாட்​டில்,​​ சில ஆர்ப்​பாட்​டங்​க​ளில் பெண்​கள் தமி​ழில் எழுதி வைத்​தி​ருந்த பதாகை சற்று வித்​தி​யா​ச​மா​னது-​ "பாலி​யல் வெறி​யைப் பரப்​பும் சினி​மாக்​கள் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​களை ஒழித்​துக்​கட்ட வேண்​டும்'.​ இந்த வாச​கம் இன்​றைய பிரச்​னையை மிக நேர்​மை​யாக அணு​கு​கின்​றது.​​ மன​தில் விதைக்​கப்​ப​டும் எண்​ணங்​கள்​தான் செய​லாக மாறு​கின்​றன.​ ​
பாலி​யல் கிளர்ச்​சி​யைத் தூண்​டும் திரைப்​பா​டல்​கள்,​​ திரைப்​ப​டங்​கள்,​​ பத்​தி​ரி​கைப் படங்​கள்,​​ செல்​போன்​க​ளி​லும் ஆபாச விடியோ காட்​சி​கள்,​​ இணை​ய​த​ளங்​க​ளில் போர்​னோ​கி​ராபி,​​ எது​வுமே தவ​றில்லை என்ற மன​நி​லை​யில் இந்​தி​யர்​கள் இருப்​ப​தாக செக்ஸ் சர்வே என எல்​லா​வற்​றை​யும் கிடைக்​கச் செய்​து​விட்டு,​​ பெண்​க​ளுக்​குப் பாது​காப்பை அதி​க​ரிப்​ப​தா​லும்,​​ கடு​மை​யான சட்​டங்​கள் மூல​மும் பாலி​யல் கொடு​மை​க​ளைத் தடுத்​து​விட முடி​யும் எனச் சொல்​வது சரி​யான வாதம் அல்ல.​ மேலை​நா​டு​க​ளில் இவை இல்​லையா?​ என்று கேட்​க​லாம்.​ அந்த வாழ்க்​கை​முறை இந்​தி​யா​வில் எல்லா வீடு​க​ளி​லும் இல்லை.

Thursday 22 November 2012

இதுவா ஜனநாயகம்?

தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பான்டீ சத்தா என்கிற குரு பிரீத் சிங் சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப் சத்தாவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்தார்கள். இரண்டு சமூகவிரோதிகள் மடிந்ததை, இந்தியாவின் அத்தனை தேசிய நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக, சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படும் அளவுக்கு அந்தக் கொலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
 பான்டீ சத்தாவினுடைய வர்த்தகக் குழுமத்தின் ஆண்டுக்கான பற்றுவரவு 6,000 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாய் வரை. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரேந்திர சிங், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்றோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் பான்டீ சத்தா. அவரது "வேவ்' (அலைகள்) குழுமம் செய்யாத தொழில்கள் இல்லை. கை வைக்காத துறைகள் இல்லை.
 பஞ்சாபில் உள்ள மொஹாலியில் 264 ஏக்கர் பரப்பில் "பேர்லேக்ஸ்' என்றொரு ஒரு துணை நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. காஜியாபாதில் 4,800 ஏக்கரில் "ஹை - டெக் சிட்டி' என்கிற குட்டி நகரத்தை உருவாக்கி வருகிறது அவரது நிறுவனம். "கேரா டௌன் பிளானர்ஸ்' என்கிற நிறுவனத்தின் மூலம் ஜெய்ப்பூருக்கு அருகில் 125 ஏக்கரில் ஒரு நவீன குடியிருப்பு உருவாகி வருகிறது. மொராதாபாத் நகரில் 52 ஏக்கரில் "வேவ் கிரீன்ஸ்' என்கிற குடியிருப்பும், கிரேட்டர் நொய்டாவில் 29 ஏக்கரில் "புல்மேரியா கார்டன் எஸ்டேட்' என்ற பெயரில் ஒரு குடியிருப்பும் உருவாகி வருகிறது. இவை அனைத்தும் பான்டீ சத்தாவின் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை.
 இத்துடன் முடிந்துவிடவில்லை பான்டீ சத்தாவின்  வியாபார சாம்ராஜ்யம். வடநாட்டிலேயே மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் பான்டீ சத்தாவாகத்தான் இருப்பார். உத்தரப் பிரதேசத்தில் ஏழு சர்க்கரை ஆலைகளும், பஞ்சாபில் ஒரு சர்க்கரை ஆலையும் அவருக்கு இருக்கின்றன. 2007-இல் அன்றைய மாயாவதி அரசு இயங்கிக் கொண்டிருந்த பத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் தனிநபர் மயமாக்கத் தீர்மானித்தது. அவற்றில் 5 சர்க்கரை ஆலைகள் மிகக் குறைந்த விலைக்கு பான்டீ சத்தாவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுபற்றிக் கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் அரசுக்கு ரூ. 1,200 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கொடுத்த அறிக்கை தூசு பிடித்துக் கொண்டிருக்கிறது.
 "வேவ்' என்கிற பெயரில் மதுபானங்கள் தயாரிக்கும் பான்டீயின் நிறுவனம் பல சர்க்கரை ஆலைகளை வைத்திருப்பதுடன், வடநாட்டில் கோகோ கோலாவின் உரிமம் பெற்ற உற்பத்தியாளரும்கூட. மூன்று காகிதத் தொழிற்சாலைகள் வைத்திருப்பதுடன், 2,500-க்கும் அதிகமான சில்லறை மதுபான விற்பனைக் கடைகளும் இந்தக் குழுமத்துக்குச் சொந்தம். திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை பான்டீ சத்தா. திரைப்பட விநியோகம், தயாரிப்பு என்று மும்பை திரையுலகத்திலும் அசைக்க முடியாத சக்தியாக இந்தக் குழுமம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவந்தது.
 இவ்வளவு கதைகளும், பான்டீ சத்தாவின் வீரதீரப் பிரதாபங்களும் எதற்காக என்று கேட்டுவிட வேண்டாம். பான்டீ சத்தா ஒன்றும் பரம்பரைப் பணக்காரரோ, பல ஆண்டுகள் உழைத்து ஒரு மிகப்பெரிய குழுமத்தை உருவாக்கிய தொழிலதிபரோ அல்ல என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.
 பான்டீ சத்தாவின் தந்தை குல்வந்த் சிங் சாராயக் கடை ஒன்றின் அருகில் சோடா, நொறுக்குத் தீனி, ஆம்லெட், வேகவைத்த முட்டை, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக பான்டீ சத்தாவும் சகோதரர்களும் பணியாற்றி வந்தனர். குல்வந்த்சிங்கிற்கு ஒரு சாராயக் கடை உரிமம் கிடைத்ததிலிருந்து வியாபாரம் கொழிக்க ஆரம்பித்தது. அதற்கு முக்கியமான காரணம், பான்டீ சத்தாவும் சகோதரர்களும் எந்தவித அடிதடிக்கும் தயாராக இருந்ததும், அடியாள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்ததும்தான்.
  அப்பா குல்வந்த் சிங்கின் மரணத்திற்குப் பின் குடும்பம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சகோதரர்கள் ஒற்றுமையாக வியாபாரம் செய்ய வேண்டுமென்றும் அவர்களது தாயார் பிடிவாதமாக இருந்தார். பான்டீ சத்தாவின் மகன் குர்தீப் தலையெடுக்கும்வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. அதற்குப்பின் பான்டீ சத்தாவுக்கும் அவரது கடைசித் தம்பி ஹர்தீப்புக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை. ரூ. 1,200 கோடி தந்து ஹர்தீப்பை ஒதுக்கிவிட பான்டீ சத்தா தீர்மானித்திருந்த நிலையில்தான் ஹர்தீப் அண்ணனைச் சுட, அவர் திரும்பச் சுட, இருவரும் இறந்து விட்டனர்.
 பான்டீ சத்தாவின் கொலையை விடுவோம். அது ஏதோ உத்தரப்பிரதேசம் தொடர்பான ஒன்று என்று தள்ளிவிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் பான்டீ சத்தாக்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதுதானே நிஜம்? கடந்த 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களான பலரும் பான்டீ சத்தாக்கள்தான் என்பதுதானே நிஜம்? மாயாவதி ஆண்டாலும் முலாயம் சிங் ஆண்டாலும் ஆட்சி மாற்றத்தால்  பாதிக்கப்படாத பான்டீ சத்தாக்கள் எல்லா மாநிலங்களிலும் பெருகி விட்டதுதானே நிஜம்?
÷சாராயம் விற்றுக் கொண்டிருந்தவர்கள், தொழிலதிபர்களாகி விடுகிறார்கள். தொழிலதிபர்களானவுடன் பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டி "கல்வித் தந்தை' என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கிறார்கள். முடிந்தால் அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி., ஏன் அமைச்சர்களே கூட ஆகிவிட முடிகிறது.  சொந்தக் கட்சி தொடங்கி விடுகிறார்கள். கேட்டால் எல்லாமே சட்டப்படிதான் செய்திருக்கிறோம் என்கிறார்கள்.
÷ராபர்ட் வதேராவிலிருந்து நிதின் கட்கரியிலிருந்து, அத்தனை பேரும் சொல்வது அதைத்தான். 30% வருமான வரி கட்டிவிட்டால் எதுவும் சட்டப்படியாகிவிடும், அப்படித்தானே? ஒருவர் எப்படி சம்பாதித்தார் என்று தெரிந்துகொள்ள விரும்பினால், அது தனிமனித உரிமையில் தலையிடுவதாகிவிடும், அப்படித்தானே?
 அரசியல்வாதிகளின் துணையில்லாமல் இவர்களால் பணக்காரர்களாகி இருக்க முடியாது. இவர்களது துணையில்லாமல் நமது அரசியல்வாதிகளால் பொதுவாழ்க்கையில் தொடர முடியாது. அதுதான் சுதந்திரம் என்றால், எதற்காகத் தேர்தல், ஜனநாயகம் என்றெல்லாம் போலி வேஷம் போட வேண்டும்? யார் கொள்ளையடிப்பது, வசூலைப் பெறுவது என்பதற்கு வாக்குகளால் ஏலம் போடுவதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?

Monday 29 October 2012

இது காலத்தின் கட்டாயம்!

இந்தியாவில் பின்தங்கியுள்ள 3,200 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து 2,500 ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளை "அரசு-தனியார் பங்கேற்பு (பிபிபி)' திட்டத்தில் அமைப்பது என்ற அரசின் முயற்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா, ரிலையன்ஸ், வேதாந்தா, ஐடிசி, ஜிண்டால், ஏர்டெல் என பல நிறுவனங்கள் நாங்கள் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளை அமைப்பதில் அரசுடன் கைகோக்கத் தயார் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு விண்ணப்பம் அளித்துள்ளன.
அனைவருக்கும் கல்விச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அதிக நிதி தேவை என்பதால் இதனை "அரசு-தனியார்-பங்கேற்பு' திட்டத்தில் தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி 1,000 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்தியஅரசு இப்பள்ளிகளுக்குச் செலுத்திவிடும். நிர்வாக ஒதுக்கீடாக 1,500 மாணவர்களை, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படி சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி பள்ளிச் செலவுகள் அனைத்தையும் நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். இந்தப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளி நேரம் தவிர்த்த மீதி நேரங்களில் வணிகப் பயன்பாட்டுக்காக, சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், பள்ளியின் நிர்வாகச் செலவை ஈடுகட்ட உதவும்.
மத்திய அரசு சொல்லும் இந்த விவகாரங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களின் சம்பளத்தை அரசாங்கம்தான் வழங்குகிறது. பள்ளி மாணவர்கள் இலவசமாகப் படிக்கிறார்கள். இவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் மட்டுமே உண்டு. இலவச பஸ் பாஸ், விலையில்லா சைக்கிள் பெற அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கும் தகுதி உண்டு.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் கல்வித் தரம் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு நிர்வாகம் சொல்லும் காரணம், ஆசிரியர் நியமனங்களை அரசு செய்கிறது. ஆனால், வரும் ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள். இவர்களை இடமாற்றம் செய்ய இயலாது என்பதால் இவர்கள் சங்கம் அமைத்துக்கொண்டு, பாடம் நடத்துவதே இல்லை. ஆகவே எங்களால் கல்வித் தரத்தை நிலைநிறுத்த முடியவில்லை என்பதுதான் நிர்வாகத்தின் குற்றச்சாட்டு.
தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மூலம் பெரும் லாபம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளிகளைப்போல தன்னிச்சையாகச் செயல்படவும் முடியாது. ஆகவே, நிர்வாகமும் அதிக கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டது. இதுதான் தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வித் தரம் குறையக் காரணம்.
இரண்டாவதாக, தற்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசு செலுத்தும் திட்டம்.
தற்போது மத்திய அரசு சொல்லும் 1,000:1,500 விகிதாசாரத்தின் படி 40% இடங்கள் ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இந்தி ஒரு பாடமொழியாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசியல் கட்சிகள் ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகளை ஏற்காது. அதனால், மத்திய அரசின் இத்திட்டம் தமிழ்நாட்டில் இடம்பெறுவதேகூடச் சந்தேகம்தான்.
மத்திய அரசினைப் போன்றே தமிழக அரசும் இங்குள்ள தொழில் நிறுவனங்களை அழைத்துப் பேசி, அவர்களது சமூகப் பங்களிப்பாக பள்ளிகளைத் தொடங்க ஊக்கப்படுத்தலாம். 50% ஏழை மாணவர்களை இப்பள்ளிகள் சேர்த்துக்கொள்ளட்டும். மீதமுள்ள 50% மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீடாக இருக்கட்டும். ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகியவற்றை அரசுப் பள்ளிகளைப் போன்றே இங்கும் வழங்கலாம். பள்ளி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் இந்த வளாகத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்திக்கொள்ளட்டும். பாடத்திட்டம் தமிழக கல்வித் துறை நிர்ணயிப்பதாக இருக்கட்டும்.
இப்போது ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் போதுமான மாணவர்கள் சேரவில்லை. ஆனால் இவர்கள் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்கள் பணி நேரத்தை முற்பகல், பிற்பகல் என்று பிரித்துக்கொண்டு, முற்பகலில் அப்பகுதி மக்களுக்காக உயர்நிலைப் பள்ளியை நடத்த முன்வந்தால், தமிழக அரசு அவர்களுக்கு 50:50 விகிதத்தில் மாணவர் சேர்க்கையை அனுமதித்து, ஏழைமாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்கலாம். இத்தகைய அணுகுமுறை உடனடியாக சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்குத் தரமான பள்ளி வளாகம் மற்றும் கல்விக்கு வாய்ப்பைத் திறந்துவிடும்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வித்தரம் தொடர்ந்து தாழ்ந்துகொண்டே வந்தால், அந்தப் பள்ளிகளை நிதியுதவி பெறும் பள்ளிப் பட்டியலிலிருந்து விடுவித்துவிடலாம். அரசு ஊழியர்களாகிவிட்ட ஒரே காரணத்துக்காகத் தரமற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது என்பது வருங்கால சந்ததியினரையே பாழ்படுத்திவிடும். அர்ப்பணிப்புணர்வுடன் தரமான ஆசிரியர்கள் உறுதி செய்யப்படாவிட்டால் அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அரசும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆசிரியர் சமுதாயமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
÷அரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் தரமாகச் செயல்பட வேண்டுமென்றால், அரசு ஊழியர்களும், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலோதான் சேர்த்தாக வேண்டும் என்று ஊழியர் விதிமுறையில் நிபந்தனை சேர்க்கப்பட்டால் மட்டுமே சாத்தியம். அதற்கு இணங்காதவர்கள் அரசுப் பணியில் நீடிக்கக் கூடாது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தப் பள்ளிகளில் தரம் தானாக உயர்ந்துவிடும்.
அனைவருக்கும் கல்வி, சிறார் தொழில்முறை ஒழிப்பு ஆகியவற்றால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆகவே ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகள் போன்ற வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது தமிழக அரசுக்கு இருக்கிறது.
கடைசியாக ஒரு சந்தேகம். 50 விழுக்காடு இடங்களைக் கட்டண இடங்களாகவும், நன்கொடை இடங்களாகவும் பெறும் கல்வி நிறுவனங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 50% இடங்களுக்கான கட்டணத்தை அரசிடமிருந்து பெறத்தான் வேண்டுமா?

Thursday 13 September 2012

தீர்ப்பு, தீர்வல்ல!

நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நடவடிக்கைகளை பத்திரிகைகள், ஊடகங்களில் வெளியிடுவது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால், நீதிமன்றம் இத்துடன் நிற்கவில்லை. சில நேர்வுகளில், குற்றம் சாட்டப்பட்ட நபர் அல்லது நிறுவனம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் ஊடகங்களில் இடம்பெறக்கூடாது என விரும்பினால், நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்திகள் வெளியாவதைத் தள்ளிப்போடலாம் என்றும் கூறியிருக்கிறது. அந்தந்த வழக்குக்கு ஏற்ப, நடவடிக்கைகளை வெளியிடுவதைத் தள்ளிப்போடுவது குறித்த உத்தரவை அந்தந்த நீதிமன்றங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
"விசாரணையும், தீர்ப்பும் செய்திகள் மூலம் பாரபட்சமானதாக அமைந்துவிடும் ஆபத்துள்ளதாகக் கருதப்படும் வழக்குகளில், செய்திகளைத் தள்ளிப்போடுவது தேவையாக இருக்கிறது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடகங்கள் மற்றும் எதிர்தரப்பினர் ஆகிய இருவரையும் சமாளிக்கும் விதத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது என்று சொல்லப்பட்டாலும், இந்தத் தீர்ப்பு ஊடகங்களுக்கு சாதகமான தீர்ப்பாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பெரிய இடத்து விவகாரங்களைப் பொருத்தவரை, அவர்கள் தங்கள் வழக்கு விசாரணை செய்திகளைத் தள்ளிப்போட நீதிமன்ற உத்தரவுகளை நிச்சயமாகக் கோரிப் பெறவே முயல்வர். அப்போது, பல வழக்குகளில் செய்திகளை சில நாள்கள், சில மாதங்கள் தள்ளித்தான் பிரசுரிக்க அல்லது ஒளிபரப்ப நேரிடும். ஆறின கஞ்சி பழங்கஞ்சி!
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, ஒரு நபரை அல்லது நிறுவனத்தைக் குற்றவாளிபோல சித்திரிக்கும் நடவடிக்கை, அண்மைக்காலமாக ஊடகங்களில் பத்திரிகைகளில் அதிகரித்துவிட்டது என்பது உண்மைதான். அதற்காக எல்லாச் செய்திகளையும் தள்ளிப்போடலாமா? அது சரியாக இருக்குமா?
இத்தகைய நேர்வுகளில் மந்தணம் (ரகசியம்) என்பதன் பொருளை எவ்வாறு தீர்மானிப்பது? விசாரணை நடவடிக்கை வெளியாவதைத் தள்ளிப்போடக் காலஅவகாசம் என்ன? அதையும் உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியிருந்தால், பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்க உதவியாக இருந்திருக்கும்.
தனிநபர்களின் அந்தரங்கம் குறித்த வழக்கு விசாரணை நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளைத் தள்ளிப்போட உத்தரவிடுவது சரியாக இருக்கும். ஆனால், ஊழல் வழக்குகள், நிறுவனங்கள் மீதான புகார்களில், "ரகசியம்' என்ற பெயரில் வழக்கு விசாரணை நடவடிக்கைகளைப் பிரசுரிக்காமலோ, ஒளிபரப்பாமலோ தள்ளிப்போடுவது சரியாக இருக்குமா?
ஊடக நெறிமுறை வேண்டும் எனும் இந்த வழக்கிற்கு காரணமான சஹாரா நிறுவனத்தையே எடுத்துக்கொள்வோம். சஹாரா நிறுவனம் பொதுமக்களிடம் பெற்ற பங்குத்தொகை ரூ.14,000 கோடியை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று கண்காணிப்பு அமைப்பான "செபி' கூறியது. அதை ஏற்க சஹாரா மறுத்தது. இந்த வழக்குத் தொடர்பாக சஹாரா நிறுவனம் நீதிமன்றத்தில் முன்வைத்த சில ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகி, விமர்சனங்கள் எழுந்தன. ஆகவே, ரகசிய ஆவணங்களை விசாரணையின் முடிவு தெரியும் முன்பாகவே ஊடகங்கள் வெளியிட்டதற்கு சஹாரா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த வழக்கைப் பொருத்தவரை, சஹாரா நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்து மக்களிடம் வசூலித்த பங்குத்தொகை பற்றியது. இதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?
ஒவ்வொரு பங்குதாரரும் இந்த வழக்கில் சஹாரா நிறுவனம் தாக்கல் செய்யும் அனைத்து ஆவணங்களையும் அறிய முழு உரிமை பெற்றவர்தானே? எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், பங்கு வர்த்தக முறைகேடு, லாபம் காட்டுவதில் முறைகேடு என்று பிரச்னைகள் எழுந்தால், அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக சொல்லித்தானே ஆக வேண்டும்?
ஆனால், தனிநபர் சார்ந்த விவகாரங்கள் வேறானவை. இதில், பிங்கி பிரமாணிக் குறித்த வழக்கு ஒரு சான்று. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற பிங்கி, தன் உடன்வாழ் பெண்ணை வல்லுறவு கொண்டதாக புகார் எழுந்தது. ஒரு வார காலத்துக்கு ஊடகங்களில் முதல் செய்தியாக, பத்திரிகைகளில் முதல்பக்கச் செய்தியாக அது இடம்பெற்றது. இப்போது அந்த வழக்கு மறக்கப்பட்டுவிட்டது.
பணியிடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் ரயில்வே பணியில் சேர்ந்த செய்தி யாருக்காவது தெரியுமா? நாளை அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் சொல்லக்கூடுமேயானால், அந்தச் செய்தியும் பத்து செய்திகளில் ஒன்றாக ஓடி மறையும்.
அதேபோல, தற்போது பல ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சஹானாஸ் குறித்த வழக்கில், அவர் அந்தரங்கம் கருதி, வழக்கு நடவடிக்கைகளை வெளியிடுவதைத் தள்ளிப்போட உத்தரவிடும்படி கோரினால், அதில் யாரும் குறை காண முடியாது.
ஆனால் இதே அளவுகோலை, 2ஜி மற்றும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்குகளிலும் விசாரணை நடவடிக்கைகளை உடனே வெளியிடத் தடை விதிக்கக் கோரினால் அது சரியாகுமா?
"பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஊடகங்கள் சிக்கிக்கொள்வதை சமநிலைப்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். "கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் தங்களுக்கான லட்சுமணக் கோட்டினை ஊடகங்கள் தாங்களே போட்டுக்கொண்டு அதை மீறாமல் இருக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
"ராவண வதங்களுக்காக' சில "லட்சுமணக் கோடுகள்' தாண்டப்படும் என்றால் அதில் தவறில்லை. இதுபோன்ற தீர்ப்புகள், பல மோசடிகளையும், ஊழல்களையும் மறைக்க பயன்படுத்தப்படும் என்பது கூடவா உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியவில்லை?

Wednesday 8 August 2012

எங்கெங்கு காணினும் ஊழலடா!

நாமக்கல் மாவட்டத்தில், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகளுக்காக ஆதி திராவிடர் நலத்துறை வழங்கிய கல்வி உதவித்தொகை ரூ.81 லட்சத்தில், சுமார் ரூ.68 லட்சத்தை கையாடல் செய்துள்ளதாக 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில், தொடக்கப்பள்ளிகளில் மட்டுமே நடந்ததாகக் கருதத் தேவையில்லை. தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி அனைத்திலும் இதுதான் நிலைமை!
இது ஏதோ இந்த ஆண்டு மட்டும்தான் இப்படியாகிவிட்டது என்றும் கருதிவிட வேண்டாம். இது தமிழகத்தில் பல ஆண்டுகளாய் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுதான்.
துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகக் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் மட்டும்தான் இந்தக் கையாடல் என்று நினைத்தால் அதுவும் தவறு. எல்லா உதவித்தொகைகளிலும் இதுபோல் கையாடல் நடக்கிறது.
கையாடல் செய்த பணத்தைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்கள் என்று கருதுவது மடமை. இதில் கல்வித்துறை அலுவலர்கள் அதிகாரிகளுக்கும் உரிய பங்கு முறையாகப் போய்ச் சேருகிறது என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் புரியும். சில இடங்களில், பள்ளி அமைந்துள்ள கிராமம், புறநகர் பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கும் முறையாகக் கிஸ்தி செலுத்தப்பட்டு வருகிறது. நடக்கும் முறைகேடுகள் பற்றி யாருமே பேசத் தயாராக இல்லை, அவ்வளவே!
2012-13 நிதிநிலை அறிக்கைப்படி பள்ளிக் கல்விக்காக ரூ. 14,555 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது ஆசிரியர்களின் சம்பளம் நீங்கலாக சுமார் 40% தொகை மாணவர்களின் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. இதில் மேலிடம் மட்டுமே ஊழல் செய்ய முடியும். ஆனால், கல்வி உதவித்தொகை, சீருடை வழங்குதல், காலணி வழங்குதல், பாடப்புத்தகங்கள் வழங்குதல், உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர்படை, விளையாட்டுப் போட்டிகள் இத்யாதி சில்லறை விவகாரங்களில்தான் பள்ளி அளவில் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழலுக்கு பச்சைக்கொடி காட்டும் கல்வித் துறை அதிகாரிகள்தான் இந்த ஊழலுக்கு அச்சாணி.
2011-12-ல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1,891 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2012-13-ல் 2,000 கோடி செலவிடவுள்ளனர். இதில் ரூ.700 கோடி மாநில அரசின் பங்குத்தொகை. மீதித்தொகை மத்திய அரசின் பங்கு. தரமான கல்வி, தொடக்கப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றுக்காக அளிக்கப்படும் இந்த நிதி, அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மூலம் செலவிடப்படுகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் அமலுக்கு வந்தபிறகு, தலைமையாசிரியர் பதவிக்கு அடிதடி, பேரம் அமலுக்கு வந்தன. இதுபோக, இப்போது தொடர் கல்வித் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில்தான் அதிகமான ஊழல் நடந்துள்ளது என்பது கல்வித் துறையுடன் தொடர்பு கொண்ட அனைவருக்குமே தெரியும்.
இடைநில்லாமல் படிக்க பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.2,000 வைப்புநிதியாக அளிக்கப்படுகிறது. 21 லட்சம் மாணவர்களுக்கு ரூ.313 கோடியை அரசு ஒதுக்குகிறது. முதலில் "வைக்க வேண்டியதை வைக்காமல்', இவர்களுக்கு வைப்புநிதி கடிதங்கள் கிடைப்பதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கல்வி உதவித்தொகையைப் பள்ளி அளவில்தான் வழங்க முடியும். ஆனால், அந்த உதவித்தொகை இன்னும் வந்து சேரவில்லை என்று சொல்லி, இழுத்தடித்து, மறக்கச்செய்துவிடுவதுதான் வழக்கமான மோசடி முறை. பள்ளிக் கல்வி உதவித்தொகை சில நூறு ரூபாய்கள்தான். ஆகவே இந்த சிறுதொகையை ஒரு குடும்பத் தந்தை மறப்பது எளிது. இருப்பினும் 200 மாணவர் உள்ள பள்ளியில் குறைந்தது ரூ.50,000/-கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, பசுமை மன்றம், பள்ளி விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவர்களுக்கு வந்து சேருவது இல்லை. எத்தனை என்சிசி மாணவர்களுக்கு உடை, உணவுப்படி கிடைக்கிறது. பள்ளி விளையாட்டுப் பொருள்கள் தரமானவையா? போட்டிகளில் வழங்கப்படும் பரிசுப்பொருள் எத்தனை மதிப்புக்கு வழங்கப்பட வேண்டும்? வழங்கப்படும் பரிசுப்பொருளின் மதிப்பு என்ன? யாராவது கேள்வி கேட்டதுண்டா?
தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டவை, சரியாக கொடுக்கப்பட்டதா என மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விசாரித்தால், இந்த ஊழலின் விரிவையும் ஆழத்தையும் அரசு கண்டறிவது மிக எளிது.
எந்தக் கட்டுப்பாடும், எந்தக் கேள்வியும் இல்லாமல் காசு கொடுத்தால் மாணவர்கள் மட்டும்தான் கெட்டுப்போவார்கள் என்றில்லை, ஆசிரியர்களும் கெட்டுப்போவார்கள்.
இந்தியாவுக்கு சுதந்திரம் ஏன் கிடைத்தது என்பதற்கான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதல்லவா புரிகிறது! மக்கள் வரிப் பணத்தையும், அரசு கஜானாவையும் அவரவர் திறமைக்கும் வாய்ப்புக்கும் தகுந்தபடி கொள்ளை அடித்துக் கொழித்துக் கொள்வதற்காகத்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்றும்; அவரவர்களுக்குத் தர வேண்டிய பங்கைத் தந்து விட்டால் தப்பித்துவிடலாம் என்றும்!
இருப்பினும் இத்தகைய அவநம்பிக்கையான சூழலிலும் ஊழலுக்கு எதிரான சில நல்ல நடவடிக்கைகள், புதிய நம்பிக்கைகளைத் தருகின்றன.

Wednesday 18 July 2012

எது நாகரிகம்?

அசாம் மாநிலத்தில், குவாஹாட்டி நகரின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒரு பெண்ணை பல இளைஞர்கள் சூழ்ந்து அடித்து, உதைத்து மானபங்கம் செய்தது இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் காலிதா என்பவர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த வன்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மகளிர் அமைப்புகள் பேரணிகள் நடத்தினர். வன்செயலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கோரினர். நாமும் வலியுறுத்துவது அதைத்தான்.
 அந்த இளைஞர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களது தோற்றம், அந்த காட்சித்தொகுப்பில் தெளிவாக இருப்பதால் அவர்களைக் கைது செய்வது காவல்துறைக்குக் கடினமல்ல. ஆனால், இந்த நேரத்தில் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
 இந்தக் காட்சியை உலகம் முழுவதும் இணையதளத்தில் மேலூட்டம் தந்து அனைவரையும் பார்க்கச் செய்தது சரியா? இதைச் செய்த நபரை "சைபர் கிரைம்' குற்றத்தில் கைது செய்ய வேண்டாமா? இந்த வன்செயலை மீண்டும் மீண்டும் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது சரியா? ஒரு சிறுமி தொடர்பான ஒரு செய்தியை, அதிலும் அதிர்ச்சிதரும் இத்தகைய காட்சிகளை எவ்வாறு வெளியிட வேண்டும் என்ற வரன்முறையை இந்திய அரசு இன்னமும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறதே தவிர ஏன் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை?
 அந்த ஒளிப்பதிவுக் காட்சியில், ஏன் அந்தச் சிறுமியை அத்தனை ஆத்திரத்துடன் ஒரு கும்பல் சேர்ந்துகொண்டு அடித்தது? "ஒரு தொலைக்காட்சி நிருபர்தான் அந்தப் பெண்ணை அடிக்கும்படி தூண்டினார்' என்று குற்றம் சாட்டியுள்ள, தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வு ஆர்வலர், பத்திரிகையாளர்களிடம் முழு விடியோவையும் போட்டுக் காண்பித்துள்ளார். அந்த விடியோ, காவல்துறைக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்படாத இக்காட்சிகளின் மூலம் காவல்துறைக்கு இந்தச் சம்பவத்துக்கான தொடக்கக் காரணம் தெரியவந்திருக்கும். காவல்துறை அதுபற்றிப் பேசாமல் மறைக்கிறது. அந்தப் பெண்ணை யாரும் சந்திக்கவிடாமல் காவல்துறையே எங்கேயோ கடத்தி வைத்திருக்கிறது. காவல்துறை ஏன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்?
 இந்தச் சம்பவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விகளை ஏன் கேட்பதில்லை அல்லது மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள்? இந்தக் காட்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனங்கள், "இந்தியாவில் பெண்கள் நடமாட முடியவில்லை' என்றும், "இதுதான் நாம் விருப்பும் இந்தியாவா?' என்றும் நியாயமான கேள்விகளைத்தான் எழுப்பின. ஆனால், அந்த 17 வயதுச் சிறுமி- 11ம் வகுப்பு படிக்கும் சிறுமி- தனது நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு மதுக்கூடத்துக்குச் (பப்) சென்றது பாதுகாப்பான செயல்தானா? என்பது குறித்து எந்த ஊடகமும் எந்த விவாதத்தையும் முன்வைக்கவில்லையே, ஏன்?
 ஆண்கள் மட்டும்தான் மது அருந்த வேண்டுமா? ஏன் பெண்கள் குடிக்கக்கூடாதா? ஆண்கள் மட்டும்தான் எப்படி வேண்டுமானாலும், எங்கேயும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்டுப்பாடு இல்லாமல் திரிய முடியுமா? பெண்களுக்கு அந்த உரிமை இல்லையா? என்று பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள். மதுக்கூடங்களுக்குச் செல்லும் சமஉரிமை பெண்களுக்கும் நிச்சயமாக உண்டு. ஆனால், சமஉரிமை கோருபவர்கள், ஆணுக்குச் சரிநிகராகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் அங்கே தங்களுக்குப் பாதுகாப்பாக சமூகம் வந்து நிற்க வேண்டும் என்று விரும்பினால் எப்படி?
 கல்லூரி மாணவர்கள், கணினித்துறை இளையோர் "ரேவ்' பார்ட்டிகளில் பங்குகொள்கிறார்கள். பெங்களூர், ஹைதராபாத், தில்லி, சென்னை என எல்லா இடங்களிலும் இதுபோன்ற போதை விருந்துகள் நடைபெறுகிறது. சில நேரங்களில் இவர்களைக் காவல்துறை ஒட்டுமொத்தமாகக் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, காலையில் வெளியே செல்ல அனுமதிக்கும்போது, இவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டுதான் வெளியே வருகிறார்கள். இந்த விருந்தில் தவறு இல்லை என்று அவர்கள் நம்பினால், இது சமூக வழக்கம் என்றால், ஏன் இவர்கள் குறுகிப்போகிறார்கள்?
 இவர்களைக் காவல்நிலையத்தில் வைத்துப் போலீஸ்காரர்கள் நடத்தும்விதம் என்ன என்பதாகிலும் தெரியுமா? இந்த அப்பாவி (?) இளைஞர்கள் மீது காவல்துறை நடத்தும் அத்துமீறலுக்கும் தெருவில் போகிறவன் அடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அப்படியானால் ஏன் இந்த அமைப்புகள் யாரும் போலீûஸக் கண்டித்துப் போராடவில்லை?
 உத்தரப் பிரதேசத்தில் பாரூத் வட்டாட்சிக்கு உள்பட்ட பக்பத் என்ற சிற்றூரைச் சேர்ந்த பெண்கள் 40 வயது வரை கடைகளுக்குத் தனியாகப் போகக்கூடாது, செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது, காதல்மணம் கூடவே கூடாது என்று தடைகள் இருப்பதாகச் சில பத்திரிகைகளில் செய்தி வந்தன. பெண்அமைப்புகள் ஏன் இந்தக் கிராமத்துக்குச் சென்று போராட்டம் நடத்தத் துணியவில்லை? ஏன் ஊடகங்கள் அந்தக் கிராமத்துக்குப்போய், பேட்டி எடுக்கவில்லை? படிக்காத கிராமப்புற மகளிருக்கு நிஜமாகவே இழைக்கப்படும் அநீதி பற்றிக் குரலெழுப்ப ஏன் யாரும் தயாராக இல்லை?
 உரிமைக்குப் போராடும் குழுக்களும் அமைப்புகளும்கூட, பாதுகாப்பு உணர்வுடன் சில போராட்டங்களைத் தவிர்க்கும்போது, ஒரு பெண் பாதுகாப்பு உணர்வுடன் சிலவற்றைத் தனக்குத்தானே தவிர்ப்பதும்தானே முறை?
 கற்பைவிட இன்பம்தான் பெரிது என்று மகளிரும், ஒழுக்கத்தைவிடப் பணம்தான் பெரிது என்று ஆடவரும் நினைக்கத் தொடங்கினால், சமுதாயம் இதுபோன்ற பல சீர்கேடுகளைச் சந்தித்தே தீரவேண்டும். கட்டுப்பாடே இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு நாம் காடுகளில் திரிந்திருக்கலாமே, சில ஆயிரம் ஆண்டுகளை வீணாக்கி நாகரிக வாழ்க்கை முறையை உருவாக்கி இருக்கவே தேவையில்லையே...
 எதற்கும் துணிந்தவர்கள் எது வந்தாலும் எதிர்கொள்ளவும் துணிய வேண்டும் என்பதுதான் குவாஹாட்டி வழங்கும் பாடம்!

Saturday 2 June 2012

பிகார் வழிகாட்டுகிறது...

புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ஆம் தேதி, பிகார் அரசு துணிந்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்கா, புகையிலையால் ஆன ஜர்தா பான் விற்பனைக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் பிகார் அரசின் அந்த அறிவிப்பு. மிக அதிக அளவில் குட்காவும், கைணி எனப்படும் புகையிலையும், ஜர்தா பீடாவும் பழக்கத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் இப்படியொரு அறிவிப்பு அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் துணிந்து தடை விதித்திருக்கும் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டுக்குரியவர்.
இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதித்துள்ள 3-வது மாநிலம் பிகார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசமும், கேரளமும் குட்கா, ஜர்தா பான் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன.
புகையிலையை, பீடி சிகரெட்டாகப் பயன்படுத்துவோர் ஒருபுறம் இருக்க, புகையில்லாப் புகையிலை வகையறாக்களாக பான், குட்கா, கைணி முதலியவை பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது. பல இடங்களில் இதற்குத் தடை உள்ளது. அபராதம் உள்ளது. ஆனால், நேரடியாகப் புகையிலையை வாயில் அடக்கிக்கொள்ளலாம். இதைச் சட்டம் அனுமதிக்கிறது.
இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவோரில் 15 வயது முதல் 24 வயது உள்ளவர்கள் 18% பேர். 24 வயது முதல் 44 வயது வரையிலானோர் 37% பேர். இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்தாலே நிலைமை விளங்கும். இதில் இளைஞர்களைப் பொருத்தவரை புகையிலையைப் பான், குட்காவாகப் பயன்படுத்துவோர்தான் அதிகம் என்பது.
இந்தியாவில் ஒரு பள்ளி மாணவன் அல்லது கல்லூரி மாணவ - மாணவியர் சிகரெட் பிடித்தால் சமூக ஒழுக்கக்கேடு. ஆனால், அவர்கள் பான், குட்கா போட்டுக்கொள்வதை யாரும் தடை செய்வதில்லை. தாய் - தந்தையருடன், ஆசிரியருடன் ஒன்றாக அமர்ந்தும்கூட, எந்தத் தயக்கமும் குற்றவுணர்வும், சமூக விமர்சனங்களும் இல்லாமல் சாப்பிட முடிகின்றது. பீடி, சிகரெட்டுக்கு மாற்றாக பான், குட்கா மாறிவிட்டன என்பதையே உணராமல் இதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய புகையில்லா புகையிலைப் பழக்கம் பெண்களுக்கு மிகவும் வசதியான போதைப் பழக்கமாக மாறிவிட்டது. இது சமூகத்தால் கெட்ட பழக்கம் என்று சொல்லப்படாததால், வெற்றிலை போடுவதைப் போன்றதொரு பழக்கம் என்றே பெண்கள் கருதுகிறார்கள். ஆனால், இது பாக்கு மற்றும் புகையிலை, நிக்கோடின் கலந்த போதைப்பொருள் என்கிற விழிப்புணர்வு பெண்களிடம் இல்லை.
இந்தியாவில் பான் மற்றும் குட்காவை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது என்று 2011 மார்ச் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்காக, எந்த மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. தொடர்ந்து இப்பொருள்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம், கேரளத்தைத் தொடர்ந்து தற்போது பிகார் மாநிலத்தில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.
பிகார் மாநிலத்தில் புகைப்பிடிப்போர் 54% பேர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்தான் புகையிலைப் பயன்பாடு 50%க்கு அதிகமாக இருக்கின்றது. இதில் மிசோரம் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. குளிர்ப்பிரதேசம் என்பதால் அங்கே 67% பேர் புகைக்கிறார்கள்.
அதையடுத்து நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. கேரளத்தில் 21% பேர் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள். தமிழ்நாட்டில் 16.2% பேர் மட்டுமே புகையிலைப் பயன்படுத்துவோர்.
மே 31 ஆம் தேதி இந்தியா முழுவதிலும் புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. அந்த ஒரு நாளிலாவது அடையாளமாக புகையிலை விற்பனைக்குத் தடை உண்டா என்றால் அதுகூட இல்லை.
ஒரு நாள் மட்டும் தடை விதிப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிற கேள்வி நியாயமானதுதான். மகான்களின் பிறந்த நாளன்று ஒருநாள் மது விற்பனையைத் தடை செய்தாலும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது கிடைப்பதைப்போலவே, பீடி, சிகரெட், குட்கா, பான் போன்றவையும் அன்று ஒருநாள் அதிக விலைக்கு விற்கப்படும் என்பதும் மிகவும் சரி. இருப்பினும், அதிக விலைக்கு வாங்கும் அந்தத் தருணத்திலாவது, இது உடலுக்குத் தீங்கானது என்பதால்தான் தடை விதிக்கிறார்கள்; அதற்கு இரட்டிப்பு விலை கொடுக்க வேண்டுமா? என்ற எண்ணம், தீப்பொறி போலத் தோன்றினாலும்கூட ஓரளவு நன்மை கிடைக்குமே என்பதுதான் நமது வாதம்.
இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 50% பேர் புகையிலைப் பயன்படுத்துவோராக இருக்கின்றனர். இவர்களில் சரிபாதி பேர் பெண்கள். புகையிலை என்பது பீடி, சிகரெட் மட்டுமல்ல. பான், குட்கா ஆகியவையும்தான். புகையிலை விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் புகையிலையால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளின் மருத்துவச் செலவுக்காக அரசு ஒதுக்கும் தொகை பல மடங்கு அதிகம்.
பான், குட்கா இரண்டும் புற்றுநோய் ஏற்படுத்தும் மூலக்கூறுகளை அதிகம் கொண்டிருந்தாலும், இவற்றை நீதிமன்றம் நேரடியாக, சட்டப்படி தடை செய்ய முடியவில்லை. ஏனென்றால், பாக்குடன் புகையிலையைக் கலப்பது உணவுக் கலப்படமாகக் கருதப்படுவதில்லை. பான், குட்கா இரண்டும் உணவுப் பொருள் அல்ல என்பதால் இந்த நிலை. ஆனால், இதன் மூலம் விளையும் தீங்குகளைக் கருத்தில் கொண்டு, பான், குட்கா ஆகியவற்றை எல்லா மாநிலங்களும் தடை செய்வது ஆரோக்கியமானதாக இருக்கும்

Wednesday 30 May 2012

ஏமாற்றப்படுகிறோம்...

பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்த்து ரசிக்கும் விளையாட்டு என்று கிரிக்கெட் விளையாட்டைப்பற்றி ஆங்கில நாடக ஆசிரியரும், சிந்தனையாளருமான பெர்னாட்ஷா கூறியது சரியோ, தவறோ. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்களை முட்டாள்களாக்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கும்கூட. ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டிகளால் அந்த விளையாட்டுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ என்ன பயன் என்கிற கேள்வி கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எரிச்சலைக் கொடுக்கின்றது. கொடுக்காதா பின்னே? மக்களின் முட்டாள்தனத்தில் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்கும்போது அதை விமர்சித்தால் பயனாளிகளுக்குக் கோபமும் எரிச்சலும் வரத்தானே செய்யும்?
ஐபிஎல் விளையாட்டில் கறுப்புப் பணம் இறக்கப்பட்டு வெள்ளைப்பணமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தந்திருக்கும் விசித்திரமான பதில்: இது தொடர்பாக வருவாய்த்துறை செயலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்குப் பதில் கிடைத்தவுடன் இதுபற்றி விவாதிப்போம்.
வருவாய்த் துறை செயலர் தில்லியில்தானே இருக்கிறார்? ஏதோ சுவிட்சர்லாந்து அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதைப்போல அமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கின. தொடங்கிய ஆண்டு முதல் தொடர்ந்து பணத்தை அள்ளியெடுக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்டங்களின் மூலம் 102 மில்லியன் டாலர் கிடைத்தது. ஆண்டுதோறும் 20 மில்லியன் டாலர் அதிகரித்துக் கொண்டே வந்தது. 2011 ஆம் ஆண்டில் (4-வது பருவம்) 160 மில்லியன் டாலர்கள் ( சுமார் ரூ.900 கோடி)கிடைத்தது. ஆனால், 2012 இல் இதுவரை 159 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக சலித்துக் கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,077 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு இதுவரை 19 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசின் எந்தத் துறையும், வருமானவரித் துறை உள்பட, நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்குக் காரணம், பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் தலைவராக இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், சி.பி.ஜோஷி, பரூக் அப்துல்லா ஆகியோர் பிசிசிஐ உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோதாதென்று, ஐபிஎல் உரிமையாளர்களாகப் பெருந்தொழிலதிபர்கள், நடிகர் - நடிகைகள் வேறு. இவர்களில் பலர் பங்குதாரர்கள் என்றும், பிநாமிகள் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், இந்த நோட்டீஸ்களுக்கு என்ன அர்த்தம்? வெறும் கண்துடைப்பு என்பதைத் தவிர!
அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் விளையாட்டில் கரம் கோத்துச் செயல்படுகின்றனர். பாஜகவைச் சேர்ந்த அருண் ஜேட்லியும், ரவிசங்கர் பிரசாதும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாதுடன் இணைந்து செயல்படுவதற்குக் காரணம், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வமல்ல. ஐபிஎல்லில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம். பணம் வரும்போது, பாஜக தீண்டத்தக்கதாகி விடுகிறது லாலு பிரசாதுக்கு. லாலு பிரசாதின் லஞ்ச ஊழல் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது பாஜகவினருக்கு!
இந்த விளையாட்டின் ஒளிபரப்பு உரிமை மற்றும் இதில் இடம் பெறும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை இவர்கள் மிகச் சரியாக வணிகமுறைப்படி பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யவும், வரிகள் இல்லாமல் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவி செய்யவும்தான் ஐபிஎல் விளையாட்டு உருவாக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது அமைச்சராக இருந்த சசி தரூர் விவகாரத்தில்தான் ஐபிஎல் போட்டிகளில் ஊழல் இருப்பதும், அரசியல் செல்வாக்கு பயன்படுவதும் வெட்டவெளிச்சமானது. இந்த விவகாரத்தில் சிக்குண்ட சசி தரூர் அமைச்சர் பதவியை இழந்தார். ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு வழக்குகளில் சிக்கி, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில் இருக்கிறார். முறைகேடுகள் நடக்கின்றன என்று அம்பலமான போதிலும்கூட இவர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த விளையாட்டுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விலை கோரப்படுகிறார்கள். இந்தியாவில் நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், விளையாட்டரங்கப் பார்வையாளர்களையும் தொலைக்காட்சி வழியாக ரசிகர்களும் சலிப்பைப் போக்கிக்கொள்ள அழகிகளின் களிநடனம் (சியர் கேர்ள்ஸ்) வேறு.
ஒலிம்பிக் உள்ளிட்ட ஏனைய விளையாட்டுப் போட்டிகளில் "ஊக்கமருந்து' பயன்படுத்தினால் வீரர்கள் தடை செய்யப்படுகிறார்களே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் வீரர்கள் ஊக்க மருந்துக்காகச் சோதிக்கப்படுவதில்லையே, ஏன்? ஒருவர்கூட இந்தக் கேள்வியை எழுப்பத் தயாராக இல்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.
விளையாட்டின் தார்மிகம், இந்தியக் கலாசாரம், அரசுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் அனைத்தையும் "கிளீன் போல்டு' செய்துகொண்டிருக்கிறது ஐபிஎல். நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியாமல் நாம் ஐபிஎல் போட்டிகளை ரசித்து வேடிக்கை பார்த்து நமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

Friday 13 April 2012

ஈயமும் பித்தளையும்!

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு அண்மையில் ஆங்கில நாளிதழ்களின் கோபத்துக்கு ஆளானது. காரணம், அரசு மற்றும் அரசு நிதியுதவியில் நடைபெறும் நூலகங்களுக்கு வாங்க வேண்டிய பத்திரிகைகள் என்று 8 பத்திரிகைகளை மட்டுமே அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டது. 5 வங்காளி, 1 ஹிந்தி, 2 உருது நாளிதழ்கள் இடம் பெற்ற இப்பட்டியலில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுகூட இடம் பெறவில்லை.
இந்தியா முழுவதிலும் இதற்கு ஆங்கில ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் உள்பட மேலும் நான்கு உள்ளூர் நாளிதழ்களையும் பட்டியலில் சேர்த்துப் புதிதாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் இருக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் ஒன்றும் உண்டு. அதை ஆங்கிலப் பத்திரிகைகள் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது என்னவென்றால், அரசியல் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகைகளாகவோ, தங்களது அரசியல் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து நடைபெறும் நாளிதழ் மற்றும் பத்திரிகைகளை அரசுப் பணத்தில் நூலகத்துக்கு வாங்கக்கூடாது என்பதுதான். இதில் மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகைகளும் அடங்கும். இதைவிட மோசமான சர்வாதிகாரப் போக்கு வேறொன்று இருக்க முடியாது என்று கோபத்துடன் பேசியிருக்கிறார் சீதாராம் யெச்சூரி.
இதில் வேடிக்கை என்னவென்றால், மேற்கு வங்க அரசு அனுமதித்துள்ள முதல்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சம்பாத் பிரதிதின், சன்மார்க், அக்பர்-இ-மாஷிக் ஆகிய மூன்று பத்திரிகைகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்கள் சார்ந்துள்ள பத்திரிகைகளை அரசியல் பத்திரிகை என்பதா, நடுநிலை நாளிதழ் என்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
மேலும் 5 பத்திரிகைகளைச் சேர்த்து ஆணை வெளியிட்ட அத்துறையின் அமைச்சர், அனைத்துப் பத்திரிகைகளையும் வாங்குவதற்கு நூலகத் துறையிடம் போதிய நிதிவசதி இல்லை. இப்போது நிறைய பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எல்லா நாளிதழ்களையும் வாங்குவது சாத்தியமா? என்று கேட்டுள்ளார். இது முழுக்க முழுக்க உண்மை. இதற்குக் காரணம் நூலகத்துறைக்குப் போதுமான நிதி அளிக்கப்படுவது இல்லை என்பதை மறுக்க இயலாது.
இந்தச் சிக்கல் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் உள்ளது. உள்ளாட்சிகள் வசூலிக்கும் சொத்து வரியில் 10 விழுக்காடு நூலக வரியாக நூலக ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், எந்த உள்ளாட்சி அமைப்புகளும் இதைச் செய்வதே இல்லை. தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். 2010 மார்ச் மாதம் வரை நூலக ஆணையத்துக்கு உள்ளாட்சிகள் அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.116 கோடி. இதில் மாநகராட்சிகள் மட்டும் சுமார் ரூ. 22 கோடி செலுத்த வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ரூ. 80 கோடிக்குப் புத்தகம் வாங்கியபோது, நூலக ஆணையத்திடம் பணம் இல்லை. சிறப்பு நேர்வாக ரூ. 50 கோடியை நிதித்துறையிடம் பெற்று, பதிப்பகங்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இதே நடவடிக்கையை எல்லா நூலகங்களின் புத்தகக் கொள்முதலுக்கும் செய்ய முடியாது.
நூலகங்களின் இந்த நிலைமைக்கு வெறும் நிதிப் பற்றாக்குறை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. நூலகங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் பிடியிலேயே இருக்கின்றன. நூலக ஆணைக் குழுவில் அரசுக்கு வேண்டியவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். நிதிநெருக்கடியில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கும்போது எந்த அளவுக்குக் கவனமாகவும், தரமான புத்தகங்களையும் வாங்க வேண்டும் என்கிற அக்கறையே இல்லாமல்தான் அவர்கள் புத்தகங்களை வாங்குகிறார்கள்.
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகங்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால், அதில் 10 விழுக்காடு புத்தகங்கள் கூட, நூலகத்துக்கான கொள்முதல் பட்டியலில் இருக்காது. ஏனென்றால், நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் பெரும்பாலும், ஆளும்கட்சியின் துதிபாடிகள் எழுதிய, யாராலும் பேசப்படாத, எவராலும் படிக்கப்படாத நூல்கள்தான். குறிப்பிட்ட சில பதிப்பகங்களும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது புத்தகங்களை நூலகத்துறை வாங்கும்படி பார்த்துக் கொண்டுவிடுகிறார்கள். ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை போன்ற சில அமைப்புகள் மூலம்தான் தரமான புத்தகங்கள் நூலகத்துறைக்கு வந்து சேர்கின்றன.
வெளிநாடுகளில் உள்ள நூலகங்களில், வாசகர்கள் தங்களுக்கு வேண்டும் என்கிற, அல்லது சிறந்த நூல் என்று அறியவந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டு, அவற்றை வாங்கி வைக்கப் பரிந்துரைப் பட்டியலில் எழுதுகிறார்கள். அந்த நூலகங்கள் வாசகர்களின் கருத்துக்கு மதிப்புத் தந்து அந்த புத்தகங்களை வாங்கி வைக்கின்றன.
புத்தகங்களையும் நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் அரசு அதிகாரிகளும் அரசு நியமனம் செய்யும் குழுவும் தேர்வு செய்யும்வரை, நூலகங்கள் தரம் குறைந்த புத்தகங்களின் புகலிடமாகத்தான் தொடரும். நிதிப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், இருக்கின்ற குறைந்த நிதியையும் இப்படி வீண்படுத்துவதுதான் இன்றைய நூலகத்தின் மிகப்பெரும் அவலமாக இருக்கிறது.
குறைந்தபட்சம், அரசியல் கட்சிகளின் அதிகாரபூர்வ நாளேடுகள் அரசு மற்றும் பொது நூலகங்களில் இடம் பெறக்கூடாது என்கிற வரைமுறை பின்பற்றப்படுவதுதான் ஓரளவுக்காவது நடுநிலை நாளேடுகள் நூலகங்களில் இடம்பெறவும், மக்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் வழிகோலும். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தங்களது கட்சிக்காக ஒரு நாளிதழைத் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.
தெற்கோ, வடக்கோ, மேற்கோ, கிழக்கோ இந்தியாவைப் பொருத்தவரை அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது, வேறென்ன?

Thursday 29 March 2012

விதிவிலக்கு பட்ஜெட்!

தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் எல்லாமும் கருத்து தெரிவித்தாலும்கூட, தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு சுமை கூட்டும்படியான எந்த வரிவிதிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கை பள்ளிக் கல்வி, மின்சேமிப்பு இரண்டுக்கும் மட்டும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இந்த இரண்டு விஷயங்களுமே அரசுக்கு தொடக்க நாள் முதலாகவே தலைவலியைக் கொடுத்து வருவன என்பதால் இதற்கு அரசு அதிக கவனம் செலுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் பல இனங்களுக்கு வரி விலக்கும் வரி குறைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள இனங்கள் பலவும் சாதாரண மக்களுக்கு அப்பாற்பட்டவையே. வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு 14.5% மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எண்ணெய் உற்பத்திக்காக வரிச்சலுகை அளிக்கப்பட்ட ஆலைகள் வரி ஏய்ப்பு செய்வது கண்டறியப்பட்டதால், ரூ.5 கோடிக்கும் குறைவாக உற்பத்தி இருந்தால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, 5 விழுக்காடு மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படவுள்ளது.
2012-13 நிதியாண்டு முதல் பத்திரப் பதிவுகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல் மதிப்புப்படி தீர்மானிக்கப்படும் என்பதாலும், நிலத்தின் மதிப்பு பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது என்பதாலும், பத்திரப் பதிவு மூலம்தான் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கவுள்ளது. இதனால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை என்றாலும், மத்திய தர வகுப்பினர் வீடு வாங்குவதற்கு பத்திரப் பதிவுக்கான அதிகரித்த தொகையையும் சேமித்தாக வேண்டுமே என்பது பயமுறுத்துகிறது.
இந்த பட்ஜெட்டில் மின்சேமிப்பைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். ரூ.3,573 கோடி மின்விநியோக திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வழித்தட மின் இழப்பை குறைக்க இது உதவும். மின்சேமிப்புக் கருவிகள், பேட்டரிகளில் செயல்படும் வாகனங்கள், புளோரசண்ட் பல்புகள் ஆகியவற்றுக்கு மதிப்புக்கூட்டு வரி 14.5 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு விளக்குத் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா புளோரசண்ட் பல்புகள் வழங்க அறிவிப்பும் செய்துள்ளனர். இதனால், மின் சேமிப்பு மிகப்பெரிய அளவில் கிடைக்காது என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கம்.
சர்க்கரை நோயாளிகளுக்காக அவர்களுக்குத் தேவைப்படும் இன்சுலின் மருந்து மீதான மதிப்புக்கூட்டு வரி ரத்தும், கோவை மற்றும் மதுரையில் புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியவை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14,552 கோடியை ஒதுக்கியுள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சீருடை, காலணி, புத்தகங்கள் என எல்லாவற்றையும் இலவசமாக அளித்துவந்த அரசு, தற்போது மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்களையும் இலவசமாக அளிக்க அறிவிப்பு செய்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை எந்தவிதச் செலவும் கட்டணமும் இல்லாமல் படிக்க முடியும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, பட்ஜெட்டுக்கு முன்பாகவே, 1223 அறிவுசார் பள்ளிகளை, கணினி பலகை கொண்ட வகுப்பறை வசதிகளுடன் உருவாக்கவும் அரசு அறிவித்திருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதை உணர முடியும்.
இன்றைய சூழ்நிலையில் பள்ளிக் கல்விச் செலவு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிக அதிகமாக இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை ஒரு ரூபாய் செலவு இல்லாமல் கல்வி பெறும் வசதி இருந்தும் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளைத் தேடிப் போகிறார்கள்? இதற்குக் காரணம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். அவர்கள் தங்களது குழந்தைகளையே அரசுப் பள்ளியில் சேர்க்கத் தயங்கும்போது, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நன்றாகச் சொல்லித் தருகிறார்கள் என்ற நம்பிக்கையை எப்படி ஏற்படுத்த முடியும்?
அரசு அலுவலர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அரசில் பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டுமே, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க மனமுவந்து முன்வருவார்கள். அரசுப் பள்ளிகளின் தரமும் அப்போதுதான் அதிகரிக்கும்.
நிதிநிலை அறிக்கை என்பது இலவச அறிவிப்புகளும், வரவு செலவு அறிக்கையும் மட்டுமல்ல. அது அரசின் கொள்கை முடிவுகளையும், செயல்திட்டங்களையும் வெளிப்படுத்தும் ஆவணமும் கூட. அந்த வகையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மாநில அளவிலான கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு, விவசாய உற்பத்தி அதிகரிப்புக்கான செயல்திட்டம் போன்றவைகள் பற்றி தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லையோ என்கிற தோற்றம் வெளிப்படுகிறது. அதற்குக் காரணம், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் காணப்பட்டாலும் அந்த ஒதுக்கீடுகள் எப்படி செலவிடப்படும் என்பதில் தெளிவு காணப்படாததுதான்.
அதிமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்திருக்கும் முழுமையான முதல் நிதிநிலை அறிக்கை இதுதான். நிர்வாகம் முழு கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குப் பிறகு கருத்துக் கூறுவதுதான் நாகரிகம் என்பதால் விமர்சனங்களை அடக்கி வாசித்திருக்கிறோம். ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியை உறுதி செய்ய அவகாசம் அளிப்பதில் தவறில்லை!

Friday 2 March 2012

போதை உபாதை!

போதைப்பொருள்களில் ஒன்றான ஹெராயினைப் பயன்படுத்துவோர் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் எனப் புள்ளிவிவரம் தருகிறது "ஐக்கிய நாடுகள் சபை போதைப்பொருள்கள் அறிக்கை-2011'. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, "தெற்கு ஆசியாவில் 40 டன் ஹெராயின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 17 டன் ஹெராயின் இந்தியாவிலுள்ள போதைஅடிமைகளால்தான் நுகரப்படுகிறது என்று தெரிகிறது.
 ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தரும் புள்ளிவிவரத்தின்படி, ஆப்கானிஸ்தானில்தான் மிக அதிகமாக, அதாவது ஆண்டுக்கு 380 டன் ஓபியம் (அபினி) உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 5 டன் அவர்களே சாப்பிட்டதுபோக, மீதமுள்ள 375 டன் அபினியின் பெரும்பகுதி இந்தியா வழியாக உலக நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, தெற்கு ஆசியாவில், குறிப்பாக மியான்மர், லாவோஸ் நாடுகளில், 40 முதல் 50 டன் விளைவிக்கப்படுகிறது. வழக்கமாக உலக சந்தைக்குப் போக வேண்டிய இந்த போதைப் பொருள், தற்போது இந்தியாவிலேயே விற்பனையாகும் போக்கு அதிகரித்துள்ளது என்பதைத்தான் ஐ.நா அறிக்கையிலுள்ள புள்ளிவிவரம் நமக்கு உணர்த்துகிறது.
 2006-ம் ஆண்டு இந்தியாவில் போதைஅடிமைகள் எண்ணிக்கை 7.5 கோடி என்று ஓர் ஆய்வறிக்கை வெளியானது. அதன்படி, மது அடிமைகள் 6.25 கோடி, கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள் 90 லட்சம், அபினிக்கு அடிமையானவர்கள் 3 லட்சம், நோயாளிகளை அமைதிப்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைப் பயன்படுத்தும் போதைஅடிமைகள் 10 லட்சம் என்று தோராயமாகக் கணக்கெடுத்தார்கள்.
 ஐ.நா. புள்ளிவிவரத்தின்படி, ஓபியம் எனப்படும் அபினி பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது 30 லட்சம். அதாவது, கடந்த 6 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்பதுதான் கவலை தரும் விஷயமாக உள்ளது.
 இந்தியாவில் அபினி சாகுபடி சுமார் 7,500 எக்டேருக்கு நடைபெறுவதாகவும், இதில் சுமார் 1,000 எக்டேர் பயிரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அழித்ததாகவும் ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சில மறைவான பகுதிகளில் பரவலாகவே கஞ்சா சாகுபடி செய்யப்படுவதும், பெயரளவில் சிறு பகுதியை மட்டும் காவல்துறையும் போதைப்பொருள் தடுப்புத் துறையும் நடவடிக்கை எடுத்து அழிப்பதும் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் வருடாந்திரச் சடங்காகத்தான் தொடர்கிறது. இதன் பின்னால் ஒரு மிகப்பெரிய மாபியாவே செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. சந்தனக் கடத்தலைவிட இந்தக் கஞ்சா மாபியா சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள்.
 சாகுபடி செய்யப்படும் கஞ்சாச் செடிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்துவதில் சிக்கல் இருப்பதால், கஞ்சாவை, எண்ணெய் வடிவத்தில் உருமாற்றிக் கடத்தும் போக்கும் உருவாகியிருக்கிறது. தங்க நாற்கரச் சாலையும் கன்டெய்னர் லாரிகளும் வந்துவிட்ட பிறகு கஞ்சா கடத்தல்காரர்களின் பணி மிகவும் சுலபமாகிவிட்டது என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புத் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
 கடத்தப்படும் போதைப்பொருள்களைத் தடுப்பதும் அழிப்பதும் ஒருபுறம் நடந்தாலும், இந்தியாவுக்குள் அதன் விற்பனையைத் தடுப்பது இன்றியமையாதது. போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பெரும்பாலும் தடுப்பு நடவடிக்கையோடு நின்று விடுகிறது. இந்தியாவில் நகரப் பகுதிகளில் நடைபெறும் விற்பனை குறித்து கவலைப்படுவதில்லை. அந்தந்த மாநிலக் காவல்துறை மட்டுமே விற்பனையைத் தடுத்து நிறுத்த முடியும் என்கிற நிலையில் இந்தியாவின் மாநகரப் பகுதிகளில் இதுபற்றிய முனைப்பு காவல்துறைக்கு இருப்பதில்லை.
 போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடியவர்கள் யார்? எந்தெந்த இடங்களில், எந்தெந்த மறைமுக வழிகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பது காவல்துறைக்கு அத்துப்படி. காவல்துறை மனது வைத்தால் எந்த வகையான போதைப்பொருள்களும் சந்தையில் கிடைக்காமல் தடுத்துவிட முடியும். சந்தையில் கிடைக்காத நிலையில் இதைப் பயன்படுத்துவோர் அல்லது போதைஅடிமைகள் எண்ணிக்கை தானாகவே குறைந்துவிடும். ஆனால், போதைப்பொருள் விற்பனைக்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதுதான் காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 அடித்தட்டு மக்களும் சமூகத்தில் போக்கிரிகளாக அறியப்பட்டவர்களும் மட்டும்தான் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலைமை இன்றில்லை. போதைப்பொருள்களின் விலை உயர உயர, அதைப் பயன்படுத்துவோரும் உயர்குடி மக்களாக இருக்கின்றனர். மிகச் சிறந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தகவல்தொழில்நுட்பத் துறையில் மிகஅதிகமாகச் சம்பாதிக்கும் இளைஞர்கள் ஆகியோரைத்தான் இந்தப் போதைப்பொருள் வியாபாரிகள் குறி வைக்கின்றனர். அதன் விளைவாகத் தகவல் தொழில்நுட்பத் துறையின் கேந்திரங்களாக விளங்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களில் போதைப்பொருள் விற்பனை மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது.
 போதைக்கு அடிமையாதல் என்பது வெறும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல. ஒவ்வொரு போதை அடிமையும் ஒரு குடும்பத்துக்கு நிரந்தரச் சுமையாக மாறிவிடுகிறார். ஆங்கிலேயர்கள் சீனாவை அடிமைப்படுத்தியதே போதைப் பழக்கத்தை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான பங்குச் சந்தை, ஜிடிபி வளர்ச்சி, அன்னியச் செலாவணிக் கையிருப்பு, தெருவெல்லாம் மோட்டார் வாகனங்கள், வாழ்க்கை வசதிகள் என்றெல்லாம் இருந்தென்ன பயன்? நமது வருங்காலச் சந்ததியினர் போதைக்கு அடிமையாகி விடாமல் நம்மால் பாதுகாக்க முடியாமல் போனால், இவையெல்லாமே அர்த்தமற்றவை.

Wednesday 29 February 2012

துப்பாக்கியல்ல தீர்வு!

அண்மையில் நடந்தேறிய இரண்டு வங்கிக் கொள்ளைகள் எந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததோ அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது, நள்ளிரவில் நடந்த காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. கொள்ளைக்காரர்களைக் காவல்துறையினர் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் அதைத் தமிழக காவல்துறையின் திறமை, சாதனை என்று போற்றிப் பாராட்டலாம். எந்தவித வலுவான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாமல், ஐந்து பேரைக் குற்றவாளிகள் என்று காவல்துறையே தீர்மானித்து அவர்களைச் சுட்டும் கொன்றுவிட்டிருப்பதை, கடமையைச் செய்திருக்கிறது காவல்துறை என்று அங்கீகரிக்க முடியவில்லை.
 வழக்கமாக எல்லா என்கவுன்டர் மரணங்களிலும் நடப்பதுபோல, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் உராய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். கதவை உடைத்ததற்கான அடையாளமோ கொலையுண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பெரிய அளவிலான போராட்டம் நடந்ததற்கான அடையாளமோ இல்லை என்பது ஒருபுறம் இருக்க, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட நபர்கள் அவர்களே அல்ல என்று தேசியக் காட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வேறு காட்டுகின்றன.
 வங்கிக் கொள்ளையும், அதில் தொடர்புள்ள குற்றவாளிகளைப் பிடிப்பதும் அல்ல பிரச்னை. குற்றவாளிகள் என்று சந்தேகிக்கும் நபர்களை அதற்குப் போதுமான ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல், அவர்களிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கு உண்டா இல்லையா என்பதுதான் இந்த என்கவுன்டர் சம்பவம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி.
 குற்றவாளிகள் என்று கருதப்படும் ஐந்து பேரில் ஒருவரையாவது உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி இருந்தால், காவல்துறை தற்காப்புக்காகத்தான் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது, நம்முன் ஓடுகின்ற கேள்வி, அந்த ஐந்து பேரில் ஒருவர் அல்லது இருவர் இந்தக் கொள்ளையில் தொடர்பே இல்லாதவராக இருந்திருந்தால், விவரம் தெரியாமல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரும் கொல்லப்பட்டிருப்பாரே, அது எந்த வகையில் நியாயம் என்பதுதான்.
 ""சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என்று சமூக விரோதக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இதுபோல சில அதிகார அத்துமீறல்களை அங்கீகரிப்பதால், சமூக விரோதிகளுக்குப் பயம் இருக்கும்'' என்பது காவல்துறையினரின் வாதமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கும் துப்பாக்கியைப் பயன்படுத்துவது என்பதை சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்க முடியாது.
 தீவிரவாதிகள், தேசத் துரோகிகள், சதித்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களிடத்தில் காவல்துறை கையாளும் அணுகுமுறையை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் கையாளக் கூடாது. காவல்துறை என்கவுன்டரைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துவது தெரிந்தால் இதுவரை கத்தி, கைத்துப்பாக்கி என்று மட்டுமே செயல்பட்டு வரும் குற்றவாளிகள் இனிமேல் ஏகே 47, வெடிகுண்டு என்று தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அப்போது, அவர்களை எதிர்கொள்ளவே முடியாத நிலைக்குப் பழைய ரைபிள்களை வைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை தள்ளப்படுமே, அதை யோசித்துப் பார்த்தார்களா?
 காவல்துறை சட்ட-ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக விரோதிகளை ஒடுக்கவும் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது உண்மை. சமூக விரோதிகளில் பெரும்பாலோருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை. முறையாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தினால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற காவல்துறையினரின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது. அதற்காக, நீதி பரிபாலனத்தைக் காவல்துறையே எடுத்துக் கொள்வதா என்ன?
 குற்றவியல் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமே, நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும்கூடத் தவறில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதானே தவிர, நூறு நிரபராதிகள் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்காகக் கொலை செய்யப்படலாம் என்று சொல்லவில்லை. சட்டத்தை மக்கள் எப்படிக் கையில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதேபோலக் காவல்துறையும் நீதிபரிபாலனத்தை, இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவர்களுக்குத் தண்டனை பிறப்பிப்பதைத் தனது கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது.
 சமூக விரோதிகளை அடக்குவதற்கும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை அத்துமீறுவதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறார்கள். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைக் காவல்துறை தீர்மானித்துத் தீர்ப்பளிக்க அனுமதித்துவிட்டால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அந்தத் துறை செயல்பட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்கவோ, விமர்சனம் செய்யவோ, உரிமையே இல்லாத ஒரு சூழலுக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை நகர்த்திவிடக் கூடும்.
 முதல்வரின் பிறந்த நாள் பரிசாகக் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, ஐந்து பேரை விசாரணையே இல்லாமல் சுட்டுத் தள்ளி சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததாகக் கூறிக்கொள்ளும் சென்னை மாநகரக் காவல்துறை ஆட்சிக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.
 குற்றவாளிகள் என்று கருதுவோரை காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளுவது அல்ல, பெருகிவரும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வு. காக்கிகளின் கையில் லத்தி இருப்பதையே மனித உரிமை மீறல் என்று சர்வதேச மனித உரிமை ஆணையம் கூறும்போது, காவல்துறையினர் துப்பாக்கித் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

Tuesday 28 February 2012

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு இருந்ததால் அவரையும் முறைகேட்டுக்கு உடந்தையானவராகக் கருதி வழக்கில் எதிரியாக இணைக்க வேண்டும் என்கிற சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி. ஒரு சிலர் லாபமடைந்தனர் என்பதாலும், அரசுக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது என்பதாலும் மட்டுமே ஓர் அரசு ஊழியர் எடுத்த கொள்கை முடிவில் குற்றம் காண முடியாது என்கிறது நீதிபதி ஓ.பி. சைனியின் தீர்ப்பு.
இப்படி தீர்ப்பளித்திருக்கும் அதே நேரத்தில், இன்னொரு கருத்தையும் அந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 2001-ல் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்திருந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணய முறையில் மாற்றம் தேவையில்லை என்று அன்றைய தகவல், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவிடம் அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார் என்பதற்கும், அந்த முடிவு பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதற்கும் தெளிவுகள் இருப்பதாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பே தங்களது பங்குகளை இன்னொருவருக்கு விற்றதும்கூட அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்குத் தெரிந்துதான் நடந்திருப்பதையும் நீதிபதி ஓ.பி. சைனி ஏற்றுக் கொள்கிறார்.
இவ்வளவையும் தனது தீர்ப்பில் கூறிவிட்டு, அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  எந்தவித உள்நோக்கத்துடனும் செயல்படவில்லை என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 17 எதிரிகளின் மீது சிபிஐ தாக்கல் செய்திருக்கும் சாட்சியங்களைப் போல ப. சிதம்பரம் மீது எதுவும் தரப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
நீதிபதி ஓ.பி. சைனியின் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது. அதில் முக்கியமான கேள்வி, ஏனைய 17 எதிரிகள் மீதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவண சாட்சியங்கள் ப. சிதம்பரம் மீது ஏன் இல்லாமல் போனது என்பதுதான். ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடரப் பிரதமர் அலுவலகத்துடன் போராடி, அது கிடைக்காத நிலையில் நீதிமன்றங்களின் படிகளில் செருப்புத் தேய ஏறி இறங்கிக் கடைசியில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ செயல்படத் தொடங்கிய பிறகுதான் ஆ. ராசா உள்ளிட்ட 17 பேர் மீதும் ஆவணங்களுடனான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய முடிந்தது. சிபிஐ அதிகாரிகளின் பதவி உயர்வை நிர்ணயம் செய்யும் உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்பளிக்கப்படாமல், அவருக்கு எதிரான சாட்சியங்களை சுப்பிரமணியன் சுவாமியோ, சிபிஐயோ எப்படித் தாக்கல் செய்ய முடியும் என்பதை நீதிபதி ஓ.பி. சைனி ஏன் யோசிக்கவில்லை என்பது தெரியவில்லை.
ப. சிதம்பரத்துக்கு எதிராக சுவாமி தொடர்ந்திருக்கும் வழக்கின் அடிப்படையே, எந்தெந்தக் குற்றங்களுக்காக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறாரோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விலை நிர்ணயத்தை அங்கீகரித்த அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் பொருந்தும் என்பதுதான். அப்படிப் பார்த்தால், ப. சிதம்பரம் குற்றவாளியல்ல என்பதற்கு நீதிபதி ஓ.பி. சைனி கூறும் வாதம் ஆ. ராசாவுக்கும் பொருந்துமே என்கிற வாதம் எழக் கூடும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது ஒரு நிர்வாக முடிவு. அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயமும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளைக் கொள்ளை லாபத்துக்கு இன்னொருவருக்கு விற்றதும் சட்டப்படி முறைகேடானதல்ல என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஓ.பி. சைனி. முதலில் ஒரு நிர்வாக முடிவில் நீதித் துறை கருத்துக் கூற முடியுமா என்பது சட்ட வல்லுநர்கள் தெளிவுபடுத்த வேண்டிய ஒன்று. இரண்டாவது, இதே வாதம் ஆ. ராசாவுக்கும்தான் பொருந்தும் என்பதால் அவர் மட்டும் காராகிரகத்தில் அடைக்கப்பட்டுக் கிடப்பானேன்?
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும், அதன் விலை நிர்ணயத்திலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் தங்கள் பங்குகளை விற்று லாபம் சம்பாதித்ததிலும் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதும், அதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதும் சிபிஐ நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணங்கள் இருப்பதால்தான் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடரவே அனுமதிக்கப்பட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், அரசாங்கம் என்றுதான் கூறுகிறதே தவிர அது தனிக்கட்சி அரசா, கூட்டணி அரசா என்று இனம் பிரிப்பதில்லை. அரசின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பு. இப்படிப்பட்ட ஒரு அமைப்பில், 2ஜி அலைக்கற்றை உரிமத்துக்கான விலை நிர்ணயத்தை அறிவித்த அமைச்சர் ஆ. ராசா குற்றவாளி, ஆனால் அங்கீகாரம் அளித்த அன்றைய நிதியமைச்சரோ, அமைச்சரவையின் முடிவுக்குத் தலைமை வகிக்கும் பிரதமரோ பொறுப்பல்ல என்பதை எப்படி ஏற்க முடியும்?
முறைகேட்டில் சம்பந்தம் இருப்பதற்கான காரணங்கள் இருக்கிறதா என்பதுதான் நீதிபதி ஓ.பி. சைனியின் பரிசீலனையில் இருந்திருக்க வேண்டுமே தவிர அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதல்ல. ஆதாரங்கள் வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்படுபவை. உரிமம் வழங்குவதில் ஆ. ராசாவுடன் ப. சிதம்பரத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் நீதிபதி ஓ.பி. சைனி அவர்மீது குற்றம் காண அடிப்படைக் காரணமில்லை என்று கூறியிருப்பது மேல் முறையீட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தோன்றவில்லை.
தீர்ப்புகள் திருத்தப்படக் கூடியவை என்பதற்காகத்தான் மேல் முறையீடு முறையே இருக்கிறது. சுப்பிரமணியன் சுவாமியின் ராசி உச்ச நீதிமன்றம் வரை போராடித்தான் வெற்றி அடைய வேண்டும் என்று இருக்கிறது போலும்!

Sunday 15 January 2012

வரவேற்கிறோம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கியுள்ள "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை' பொதுத்துறை நிறுவனமாகிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கும் முடிவு பாராட்டுக்குரியது.
திமுக அரசில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்பும்கூட, இத்திட்டத்தால் மக்கள் பயனடையவில்லை என்றும், காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற்றன, இதற்குப் பின்னணியில் ஆட்சியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துக்குத் தரப்படும் கட்டணத்தை, பொது மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தினால், நிரந்தரமான முதலீடாக அது இருக்கும் என்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெறுவர் என்றும் தனது பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கூடிய முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது நடந்த ஆளுநர் உரையில், ""கடந்த அரசின் காப்பீட்டுத் திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே, அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி, அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்'' என்று குறிப்பிடப்பட்டது.
அப்போது நாம் குறிப்பிட்டிருந்த ஒரு கருத்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் அரசு மருத்துவமனைகளின் மேம்பாடு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது. அதை இப்போதும் நாம் முதல்வருக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
கடந்த ஆட்சியில், கலைஞர் உயிர்காப்பு சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்துக்காக ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டபோது, ஒரு குடும்பத்துக்கு ரூ.469 பிரீமியம் வீதம், ஒரு கோடி குடும்பங்களுக்காக ரூ.469 கோடி வழங்கப்படவும், அதே நேரத்தில், இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கேட்புத்தொகை 65 விழுக்காடு எட்டாத நிலைமை இருக்குமேயானால், மீதமுள்ள தொகையை தமிழக அரசுக்கே திரும்பத் தர வேண்டும் எனவும் கூறுகின்ற ஒரு நிபந்தனை இருக்கிறது. ஆகவே கொடுக்கப்பட்ட சந்தாத் தொகையையும், இதுவரை சிகிச்சைகளுக்காக வழங்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையையும் கணக்கிட்டு, 65 விழுக்காட்டுக்குக் குறைவாக கேட்புத்தொகை இருக்குமேயானால், மீதித்தொகையை கவனமாகக் கேட்டுப் பெற வேண்டும் என்பதையும் தமிழக அரசுக்கு நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
பொதுத்துறை நிறுவனத்திடம் இத்திட்டம் அளிக்கப்பட்டதால் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபம் அடைவது தவிர்க்கப்பட்டு, ஊழல் இல்லாமல் ஆகிவிட்டாலும்கூட, தமிழக அரசு கவனமாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.
கடந்த திமுக ஆட்சியில் இருந்த காப்பீட்டுத் திட்டத்தில் 642 நோய்களுக்காக சிகிச்சை பெற முடியும் என்றால், தற்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள காப்பீட்டுத் திட்டத்தில் 1,016 சிகிச்சை முறைகளுக்குப் பலன் பெற முடியும். ஆகவே, நிறையப் பேர் பயனடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் மட்டும்தான் லாபம் பெற வேண்டும் என்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அதே சிகிச்சைக்கும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். காப்பீடு சிகிச்சைக்குத்தானே தவிர, எங்கே சிகிச்சை பெறப்படுகிறது என்பதற்காக அல்ல. அரசு மருத்துவமனைகளும் இத்தகைய உயிர்காப்பு சிகிச்சைகளை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளித்து, அதற்கான கேட்புத் தொகையைப் பெற்று, அதை ஏன் அந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள்தான். காப்பீட்டுத் திட்டத்தில் கேட்புத்தொகை பெற வாய்ப்புள்ளது என்பதை நிரூபிக்க, முதல் ஆதாரமாகத் தங்களது குடும்ப அட்டையைக் காட்டினாலும் அவர்களை அரசு மருத்துவர்களே சில குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதும், அங்கே போய் அவர்களே அறுவைச் சிகிச்சை செய்வதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைக்கும் அந்த அரசு மருத்துவருக்கும் தனிப்பட்ட முறையில் பணம் கிடைக்கிறது.
இந்த அவலத்தைத் தடுக்க அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அரசு இந்த மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவிக்கலாம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையிலேயே அறுவைச் சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு, ஒரு சிறு தொகையை மருத்துவருக்கும் உடன் பணியாற்றும் செவிலியர் மற்றும் மருத்துவக் குழுவினருக்கும் பகிர்ந்து அளிக்க வகை செய்தால், அரசு மருத்துவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைத் தனியார் மருத்துவமனைகளுக்குத் திருப்பிவிடும் அவலம் தொடராது.
முன்பு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்புத்தொகை அளிக்க முடியும் என்றாலும்கூட, ""ரூ.80 ஆயிரத்துக்கு மேல் கிடையாது, அதற்கேற்ப பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று மருத்துவமனைகளுக்கு வாய்மொழி அறிவுரை இருந்தது. இதனால் மருத்துவமனைகளுக்குத் தடை இல்லாமல் பணம் கிடைத்தது என்றாலும், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் மற்றும் மருந்து மாத்திரை செலவுகளுக்காக நோயாளிகள் பட்டபாட்டைச் சொல்லி மாளாது.
ஆனால், முதல்வரின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முந்தைய நாள் மற்றும் சிகிச்சை முடிந்த பிறகு 5 நாள்களுக்கு ஆகும் செலவு வழங்கப்படுவது பாராட்டத்தக்கது.