தேர்தல் ஆணையரின் கருத்து ஒவ்வொரு தமிழனும் தலைக்குனியக்குடிய வகையில்  உள்ளது தேர்தல் ஆணையரின் கருத்து!  சரியா? தவறா? என் ஆராயத் தேவை இல்லை.நம் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக சோதனையின்போது கைப்பற்றபடும்.பணங்களே இதற்கு  சாட்சிகளாக உள்ளன.அப்படி உண்மையில் நாமும் சொல்லலாம் இந்த தேர்தல்  பணநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் நடக்கும் தேர்தல் அதனால் தான்  தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்துக்  கட்சிகளும்  பெரும்பாலும் பண முதலைகளை வேட்பாளர்களாக அறுவித்துள்ளனர். இதில்  யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்தான் உள்ளது. ஏன்  பண முதலைகளாக இருந்தால் மட்டும் தான் சட்டமன்றதிக்கும்  நாடாளுமன்றதிக்கும் செல்ல முடியும் என்பது எழுதப் படாத விதியாக மாறிவிட்டதே !    பணத்தை மட்டுமே தகுதியாக கொண்டு எத்தனையோ முதலைகள் ஜனநாயகத்தையே  மவ்னமாக்கி  கொண்டு இருக்கிறார்களே   மக்களுக்கு சேவை செய்யவா பணங்களை வாரி இறைக்கிறார்கள்?.                  
