பதிவுகள்

Tuesday 1 March 2011

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு


ஆமதாபாத்: குஜராத்தில் ரயில் எரிப்பு வழக்கில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குஜராத் சிறப்பு கோர்ட் அதரடியான தீர்ப்பை வெளியிட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தியா சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் வன்முறை கும்பல் ஒன்று ரயிலுக்கு தீ வைத்து எரித்தது. இதில் 59 கரசவேகர்கள் கொல்லப்பட்டடனர். இதனை தொடர்ந்து மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஐ.எஸ்.ஐ., அமைப்பு தலைமறைவில் இந்த சதி திட்டம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை ஆமதாபாத் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 134 பேர் சேர்க்கப்பட்டனர். 80 பேர் சிறையில் உள்ளனர். 15 பேர் ஜாமீனில் உள்ளனர். 13 பேர் ஆதாரமின்மையால் விடுவவிக்கப்பபட்டனர். 16 பேர் தலைமறைவாக உள்ளனர்.

நம்பத்தகுந்த ஆதாரம்: இன்று 95 பேர் மீதான குற்றம் தொடர்பாக 31 பேர் குற்றவாளிகள் என சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ரயிலை எரித்து 59 பேரை கொன்ற சதித்திட்டம் உண்மைதான் என கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதற்கான ஆதாரங்களை நம்பத்தகுந்ததாக இருந்ததாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது . குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று ( செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி 11 பேருக்கு தூக்குத்தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.


என்ன குற்றம் புரிந்தனர் இவர்கள் ? : தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டு கோர்ட் ஏற்றுக்கொண்ட குற்றப்பிரிவுகள் விவரம் வருமாறு: செக்ஷன் 302 ( கொலைக்குற்றம்), 307 ( கொலை முயற்சி), 120 பி ( கிரிமினல் சதி), 147, 148 ( கொடும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்), 323, 324, 325, 326, ( காயப்படுத்துதல்), 153 ஏ., ( இரு மதபிரிவினர்கள் இடையே பகைமை உண்டாக்குதல்) மற்றும் ரயில்வே துறை சட்டத்தின் படி பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தில் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு கோர்ட் ஏற்றுக்கொண்டது