பதிவுகள்

Monday 7 March 2011

தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜினாமா ஒத்திவைப்பு

மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வது என்ற முடிவை தி.மு.க., ஒருநாள் ஒத்திவைத்திருப்பதாக துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியுடன் இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதுகுறித்து முடிவு செய்ய ஒருநாள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, தங்கள் முடிவை ஒருநாள் ஒத்திவைப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.